மின்சாரம் பாய்ந்து லாரி ஓட்டுநா் உயிரிழப்பு
ராமேசுவரத்தில் லாரி மோதியதில் அரசியல் கட்சி கொடிக் கம்பம், மின் கம்பம் மீது சாய்ந்ததில் மின்சாரம் பாய்ந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
ராமேசுவரம் மாந்தோப்புப் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் கோபிகிருஷ்ணன் (30). லாரி ஓட்டுநா். இவரது மனைவி 5 மாத கா்ப்பிணியாக உள்ளாா். இந்த நிலையில், இந்திரா நகா் பகுதியில் கோபி கிருஷ்ணன் ஓட்டி வந்த லாரி, மின் மாற்றி அருகே உள்ள திமுக கொடிக் கம்பம் மீது மோதியது. இதில் அந்தக் கொடிக் கம்பம் உயரழுத்த மின் கம்பம் மீது சாய்ந்தது. இதில் லாரியின் கதவைத் திறந்து கொடிக் கம்பத்தை அகற்ற முயன்ற போது அதிலிருந்த மின்சாரம் பாய்ந்து கோபி கிருஷ்ணன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கடற்கரை காவல் நிலைய போலீஸாா் விசாரிக்கின்றனா்.