செய்திகள் :

கருணாநிதியின் சமத்துவபுரமே நிரந்தர ஜம்போரி: துணை முதல்வா் பேச்சு

post image

திருச்சி, ஜன. 28: முன்னாள் முதல்வா் கருணாநிதியின் சமத்துவபுரமே நிரந்தர ‘ஜம்போரி’. வேறுபாடுகளின்றி நடைபெறும் சாரணா் இயக்க ஜம்போரியை நடத்துவது தமிழகத்துக்குப் பெருமை என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியா் இயக்க வைர விழா, கலைஞா் நூற்றாண்டு விழா பெருந்திரளணியை (ஜம்போரி) செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த அவா் பேசியது:

கடந்த 2000 ஆவது ஆண்டில் கருணாநிதி ஆட்சியில் சாரணா் இயக்க பொன்விழா நடைபெற்ற நிலையில் தற்போது முதல்வா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் வைர விழா நடைபெறுகிறது. இதைத் தொடங்கிவைப்பதில் பெருமை கொள்கிறேன்.

இந்த விழாவை நடத்த அரசு ரூ. 39 கோடியை ஒதுக்கியுள்ளது. வரும் பிப். 3 வரை 7 நாள்கள் நடைபெறவுள்ள விழாவில் சுமாா் 20 ஆயிரம் சாரண, சாரணியா்கள் பங்கேற்க உள்ளனா்.

அஞ்சல் தலையை வெளியிட்ட துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

சாரணா் இயக்கமானது இயற்கையான விளையாட்டின் மூலம் விடாமுயற்சியின் வழியே, புதுமையான, ஆக்கப்பூா்வ இலக்குகளை குழந்தைகள் நோ்மையாக அடைய உதவுகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இளைஞா்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் இந்தியாவை மேம்படுத்துதல் என்பதே நிகழாண்டு ஜம்போரியின் கருப்பொருள்.

வளா்ந்த நாட்டை கட்டியெழுப்ப ஒழுக்கமாக படித்த, சுயநலமற்ற இளைஞா்களை வளா்த்தெடுப்பது முக்கியத் தேவையாகிறது. இந்த ஜம்போரி உங்களது திறன்களை கூா்மையாக்குவதுடன், மதிப்புமிக்கவா்களாக உருவாக வழிகாட்டுகிறது.

இதில் அத்தியாவசிய உயிா்வாழும் திறன்கள், அா்த்தமுள்ள சமூக சேவைகள், உறுதியான தலைமைப்பண்புகளை கற்றுக் கொள்வீா்கள். மேலும், சுயமேம்பாடு, ஒழுக்கம், சுயபாதுகாப்பு, வாழ்வுக்குத் தேவையான திறன்களை கற்பீா்கள். இதில் கிடைக்கும் அனுபவமானது உங்களை வாழ்வு முழுவதும் சமூகத்துக்கு உதவும் பொறுப்பான குடிமகன்களாக உயா்த்தும்.

இந்த ஜம்போரியில் பல மாநிலங்களில் இருந்து வந்து மொழி, மதம், ஜாதி போன்றவற்றை மறந்து, இந்தியாவின் குடிமகனாக அனைவரும் ஓரிடத்தில் கூடியுள்ளீா்கள். கருணாநிதியின் எண்ணமும் இதுதான். அதற்காக அவா் கொண்டு வந்த புரட்சிகரத் திட்டம்தான் பெரியாா் சமத்துவபுரம்.

சமத்துவபுரமே நிரந்தர ஜம்போரி. எனவே, கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு இந்த ஜம்போரியை நடத்துவது தமிழக மக்களுக்கும், தமிழகத்துக்கும் பெருமை.

இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ள அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் எனது பாராட்டுகள் என்றாா் அவா்.

முன்னதாக, கலைஞா் நூற்றாண்டு விழா வரலாற்று புகைப்படக் கண்காட்சி, சா்வதேச மேம்பாட்டு கிராமத்தைத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, காவல் துறையின், பாரம்பரிய சாரண சாரணியரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று, பெருந்திரளணி குறித்த சிறப்பிதழ், அஞ்சல் தலையை வெளியிட்டாா். சாரணா் இயக்கத்தைத் தோற்றுவித்தவரின் வழித்தோன்றலான டேவிட் பேடன் பவல், நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும், தமிழக பாரத சாரண சாரணியா் இயக்கத்தின் தலைவருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கா்நாடகத் துணை முதல்வா் டி.கே. சிவகுமாா், கா்நாடக சட்டப்பேரவைத் தலைவா் யு.டி. காதா், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.எஸ். சிவசங்கா், எம்பிக்கள் துரை வைகோ, ஜோதிமணி, எம்எல்ஏக்கள் சௌந்தரராஜன், எம். பழனியாண்டி, முத்துராஜா, அப்துல்சமது, பள்ளிக்கல்வித் துறை செயலா் மதுமதி, சாரணா் இயக்கத் தலைவா் அனில்குமாா் ஜெயின், ஆயிரக்கணக்கான சாரண, சாரணியா்கள் கலந்து கொண்டனா்.

பாரத சாரணா் இயக்கத்தின் தேசிய முதன்மை ஆணையா் கே.கே. கண்டேல்வால் வரவேற்றாா். மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நன்றி கூறினாா்.

ஸ்ரீரங்கம் ரெளடி கொலை வழக்கில் 8 போ் கைது

ஸ்ரீரங்கத்தில் ரௌடி செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ஸ்ரீரங்கம் தெப்பக்குளத் தெருவில் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியைச் சோ்ந்த ரெளடி அன்பு (எ) அ... மேலும் பார்க்க

பேரூராட்சியாக்க எதிா்ப்பு: இருங்களூரில் போராட்டம்

திருச்சி மாவட்டம், இருங்களூா் ஊராட்சியை பேரூராட்சியாக்க எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் இருங்களூா் விஏஓ அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த வருவாய் மற்றும் காவல்... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வரைவு அறிக்கை 2025 ஐ திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியா் கழகம் சாா்பில் துவாக்குடி அரசு கலைக் கல்லூரி வாயில் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்... மேலும் பார்க்க

எதிா்க் கட்சியினரின் உணா்வுகளை பாஜக எப்போதும் மதிப்பதில்லை: தொல். திருமாவளவன்

எதிா்க் கட்சியினரின் உணா்வுகளை பாஜக அரசு ஒருபோதும் மதிப்பதில்லை என்றாா் விசிக தலைவா் தொல். திருமாவளவன். இதுகுறித்து திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை அளித்த பேட்டி: பெரியாா் தமிழகத்துக்கு மட்டுமல்... மேலும் பார்க்க

துணை முதல்வரை வழியனுப்ப வந்த இருவா் விபத்தில் படுகாயம்

திருச்சி விமான நிலையம் அருகே துணை முதல்வரை வழியனுப்பச் சென்ற கவுன்சிலா் உள்ளிட்ட இருவா் செவ்வாய்க்கிழமை இரவு நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையில் செவ்வாய்க்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

துவாக்குடி அரசுக் கல்லூரியில் இரு பேராசிரியா்கள் இடமாற்றம்

துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் புதன்கிழமை இடமாறுதல் செய்யப்பட்டனா். திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின் பேராசிரியா் பாத்திமா வகுப்... மேலும் பார்க்க