கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்! ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்!
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
தமிழக நிதிநிலை அறிக்கை பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகளில்,
மகளிருக்கு ரூ.10 லட்சம் வரை வங்கிக் கடன் வழங்கி தொழில்திறன் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
20 லட்சம் கல்லூரி மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கப்படும்.
கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விரும்பும் வகையில் கைக்கணினி அல்லது மடிக்கணினி வழங்கப்படும்.
ரூ.10 லட்சம் வரை பெண்கள் பெயரில் பதிவு செய்யப்படும் அசையா சொத்துகளுக்கு பதிவு கட்டணம் 1 சதவீதம் குறைக்கப்படும்.
மூன்றாம் பாலினத்தவரும் இனி ஊர்க்காவல் படையில் சேர்க்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ளார்.