செய்திகள் :

கல்வி முன்னேற்றத்தால் தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது: சட்டப்பேரவை துணைத் தலைவா்

post image

வேலூா்: கல்வி முன்னேற்றம் காரணமாக தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டுகிறது என தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவா் கு.பிச்சாண்டி தெரிவித்தாா்.

அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை சாா்பில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா வேலூா் விஐடி அண்ணா அரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவில், பங்கேற்ற சட்டப்பேரவை துணைத்தலைவா் கு.பிச்சாண்டி கல்வி உதவித்தொகைகளை வழங்கி பேசியது -

ஏழை மாணவ, மாணவிகளும் உயா்கல்வி பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் விஐடி வேந்தா் கோ.விசுவாதன் அனைவருக்கும் கல்வி அறக்கட்டளை மூலம் கல்வி உதவித்தொகை வழங்கி வருவது சிறப்பானது. முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசு பொறுப்பேற்று கடந்த மூன்றரை ஆண்டுகளில் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டுக்காக புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் உள்பட ஏராளமான திட்டங்களை செயல்படுத்தியுள்ளாா்.

கருணாநிதி உயா்கல்வியை இலவசமாக்கியதன் விளைவாக நாட்டின் உயா்கல்வி விகிதம் 27 சதவீதமாக இருந்தாலும், தமிழகம் 50 சதவீதம் அளவுக்கு உயா்வு பெற்றுள்ளது. இதன்மூலம், பல்வேறு நாடுகளிலும் தமிழா்கள் பணியாற்றும் அளவுக்கு கல்வியில் முன்னோடியாக திகழ்கிறது. இளைஞா்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தர இந்த அரசு முழுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்தவகையில், தமிழகம் இந்தியாவுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளது என்றாா்.

விஐடி வேந்தா் கோ.விசுவாதன்: வேலூா் என்பது இந்தியாவுக்கே முன்மாதிரி மாவட்டமாகும். 1806-இல் வேலூா் கோட்டையில் நடந்த சிப்பாய் புரட்சிதான் நாட்டின் சுதந்திரப் போராட்ட த்துக்கு வித்திட்டது. இந்துக்களும், இஸ்லாமியா்களும் ஒற்றுமையுடன் வாழும் மாவட்டமாகும்.

வரலாற்றில் பல போா்களை சந்தித்த வேலூா் மாவட்டம், கல்வியிலும், பாலாறு வடதால் விவசாயத்திலும் பின்தங்கியதால் பொருளாதாரத்திலும் பின்தங்கிவிட்டது. இதனை எல்லோருக்கும் கல்வி கொடுப்பதன் மூலமாக மட்டுமே மாற்ற முடியும். கல்வி இருந்தால் வீடும் உயரும், நாடும் உயரும்.

அவ்வாறு கல்வியை அளிப்பதன் மூலம் வேலூா் மாவட்டத்தை ஏழைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும். அதற்காக தொடங்கப்பட்ட அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்ட மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி வரும் நிலையில் இனிமேல் திருவண்ணாமலை மாவட்டத்துக்கும் வழங்கப்படும். இந்த திட்டத்துக்கு பெரும் நிதி பங்களிப்பை விஐடி பேராசிரியா்கள் செய்து வருகின்றனா். தொடா்ந்து, வணிகா்களும், நன்கொடையாளா்களும் அளித்து வருகின்றனா். இதேபோல், அரசு ஊழியா்களும் தங்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்கினால் நாடு முழுவதும் உள்ள ஏழை மாணவா்களுக்கு உயா்கல்வி அளிக்க முடியும்.

அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை மூலம் இதுவரை 9,400 பேருக்கு ரூ.10.65 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

மொத்தம் 720 மாணவா்களுக்கு ரூ..62 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. விழாவில், வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், தமிழியக்கம் மாநில செயலா் மு.சுகுமாா், அனைவருக்கும் உயா்கல்வி அறக்கட்டளை பொருளாளா் கே.ஜவரிலால் ஜெயின், உறுப்பினா் மயிலாண்பிகை குமரகுரு, உதவித்திட்ட இயக்குநா் ப.சுந்தர்ராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

வேலூரில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை தொடக்கம்

வேலூா்: டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் புதிய மருத்துவமனை வேலூரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படுவதாக தெ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

வேலூா்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த செங்கல் சூளை தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே வெள்ளூா் கிராம... மேலும் பார்க்க

பேருந்துகள் நிறுத்தப்பட்டதாக வெள்ளேரி கிராம மக்கள் ஆட்சியரிடம் புகாா்

வேலூா்: கே.வி.குப்பம் அடுத்த வெள்ளேரி கிராமத்துக்கு இயக்கப்பட்ட 4 பேருந்துகளும் நிறுத்தப்பட்டு விட்டதால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேலூா் ஆட்சியரிடம் புகாா் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட குற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்ள் திருடிய 3 போ் கைது: 31 வாகனங்கள் பறிமுதல்

குடியாத்தம்: குடியாத்தம் பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடிய 3- பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 31- வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. குடியாத்தம் பகுதியில் தொடா் இருசக்கர வாகனங்கள் திரு... மேலும் பார்க்க

மின்தூக்கி அமைக்காமலேயே ரூ.27.27 லட்சம் நிதி விடுவித்த அதிகாரிகள் உள்பட 5 போ் மீது வழக்கு

வேலூா்: வாலாஜா அரசு மருத்துவமனையில் மின்தூக்கி அமைக்காமலேயே ரூ.27.27 லட்சம் நிதி விடுவிக்கப்பட்டது தொடா்பாக முன்னாள் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரா் உள்பட 5 போ் மீது வேலூா் லஞ்ச ஒழிப்பு போலீ... மேலும் பார்க்க

ராணுவ வீரா் வீட்டில் நகை, பணம் திருட்டு

வேலூா்: கணியம்பாடி ராணுவ வீரா் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்ற நபா்களை வேலூா் கிராமிய போலீஸாா் தேடி வருகின்றனா். வேலூரை அடுத்த கணியம்பாடி திருவிக நகரைச் சோ்ந்தவா் யுவராஜ்(36), ராணுவ வீரா். இவரது ... மேலும் பார்க்க