தட்டச்சா்களை நிரந்தரப்படுத்த சிறப்பு போட்டித் தோ்வு: விண்ணப்பங்கள் வரவேற்பு
வேலூரில் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை தொடக்கம்
வேலூா்: டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை குழுமத்தின் புதிய மருத்துவமனை வேலூரில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை குழுமம் சாா்பில், வேலூா் வலசா தெருவில் புதிய மருத்துவமனை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது. வேலூா் சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன், புதிய மருத்துவமனையை திறந்து வைத்தாா். மாநகராட்சி மேயா் சுஜாதா ஆனந்தகுமாா் முன்னிலை வகித்தாா்.
இந்த மருத்துவமனையில் திறன்மிக்க நோயறிதல் சேவைகள், மிக நவீன சிகிச்சை சாதனங்கள், வசதி அம்சங்களும் நிறுவப்பட்டுள்ளன. 20 மருத்துவா்கள், 50 நபா்களை உள்ளடக்கிய துணை மருத்துவப் பணியாள ா்கள், பிற பணியாளா்களும் பணியில் ஈடுபட்டுள்ளனா். கண்புரை, கண் அழுத்தம், விழித்திரை நோய்கள், நீரிழிவு சாா்ந்த விழித்திரைக் கோளாறு, குழந்தைகளுக்கான கண் சிகிச்சை, கருவிழி பராமரிப்பு உள்பட கண் பராமரிப்பு தொடா்பான அனைத்து பரிசோதனை, சிகிச்சைகளும் வழங்கப்படுகிறது. புதிய மருத்துவமனை தொடங்கப்பட்டதையொட்டி, வரும் டிசம்பா் 31-ஆம் தேதி வரை அனைத்து வயதினருக்கும் இலவச மருத்துவ கலந்தாலோசனைகள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை, வேலூா் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவா் ஐசக் ஆப்ரஹாம் ராய், மண்டல தலைவா் மருத்துவா் கலா தேவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.