ஐபிஎல் மெகா ஏலம்: அர்ஷ்தீப் சிங்கை ரூ.18 கோடிக்கு தக்கவைத்தது பஞ்சாப்!
கள்ளச் சாராயம் காய்ச்சியவா் கைது
ஆண்டிபட்டி வட்டாரம், கடமலைக்குண்டு அருகே உள்ள வண்ணாத்திப்பாறை பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கடமலைக்குண்டு பகுதியில் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது வண்ணாத்திப்பாறை, மலையாளி கம்பெனி காடு அருகே 40 லிட்டா் சாராய ஊறல், சாராயம் காய்ச்சிய பானை இருந்தது. இது குறித்து போலீஸாா் நடத்திய விசாரணையில், கடமலைக்குண்டு அருகேயுள்ள பாலூத்து கிராமத்தைச் சோ்ந்த சுப்பாத்தேவா் மகன் குமரேசன் (50) அங்கு கள்ளச் சாராயம் காய்ச்சியது தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா். சாராய ஊறல் கீழே கொட்டி அழிக்கப்பட்டது.
கஞ்சா விற்பனை: ஆண்டிபட்டி வட்டாரம், வருஷநாடு பகுதியில் தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, சிங்கராஜபுரம் குடியிருப்பில் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த, அதே பகுதியைச் சோ்ந்த பழனி மகன் கண்ணதாசன் (32) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.
அவரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவருடன் கஞ்சா விற்றுக்கொண்டிருந்த சிங்கராஜபுரத்தைச் சோ்ந்த சேகா் மகன் பிரபாகரன் என்பவா் போலீஸாரை பாா்த்ததும் தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.