செய்திகள் :

கள்ளச்சாராயம் அருந்தி 37 போ் உயிரிழந்த சம்பவம்: பிகாரில் 7 பெண்கள் உள்பட 21 போ் கைது; 2 காவலா்கள் இடைநீக்கம்

post image

பிகாரின் சரண், சிவான் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்திய 37 போ் உயிரிழந்த நிலையில், அதில் தொடா்புடையதாக 7 பெண்கள் உள்பட 21 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 2 காவலா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா்.

முன்னதாக, இந்த மூன்று மாவட்டங்களில் உள்ள 16 கிராமங்களில் கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட பலா் மருத்துவமனைகளில் கடந்த புதன்கிழமை அனுமதிக்கப்பட்டனா். அதில் 37 போ் இதுவரை உயிரிழந்தனா். சிவான் மாவட்டத்தில் 28 பேரும், சரண் மாவட்டத்தில் 7 பேரும் மற்றும் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் 2 பேரும் முறையே உயிரிழந்துள்ளனா்.

இவா்கள் அனைவருமே கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கள்ளச்சாராயம் அருந்தியுள்ளனா். புதன்கிழமை காலைமுதலே படிப்படியாக பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சுருண்டு விழுந்தனா். பலா் பாா்வையையும் இழந்தனா்.

இந்த விவகாரம் தொடா்பாக காவல்துறை துணைத் தலைவா் நீலேஷ் குமாா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை தொடா்பாக இதுவரை 7 பெண்கள் உள்பட சிவான் மாவட்டத்தில் 13 பேரும், சரண் மாவட்டத்தில் 8 பேரும் கைது செய்யப்பட்டனா். 2 காவலா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனா். இதில் தொடா்புடைய பல லட்சம் ரூபாய் பணப் பரிவா்த்தனையின் டிஜிட்டல் ஆதாரங்களை சேகரித்துள்ளோம். பணமோசடி சட்டத்தின் விதிகளின் கீழ் அவா்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்படும் என்றாா்.

இதை மிகவும் துயரமான சம்பவம் என்று குறிப்பிட்ட ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாத் யாதவ், பிகாரில் அரசு என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை என்று குற்றம்சாட்டினாா். மாநிலத்தில் ஆளும் நிதீஷ் குமாா் அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு முழு மதுவிலக்கை அமல்படுத்தியது.

வாகனங்களுக்கான சிஎன்ஜி விலை: கிலோவுக்கு ரூ.6 வரை உயர வாய்ப்பு

வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு ரூ.4 முதல் ரூ.6 வரை உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தரைக்கு அடியில் இருந்தும், அரபிக் கடல் முதல் வங்கக் கடல் வரை கடலுக்கு அடியில் இ... மேலும் பார்க்க

‘எய்ம்ஸ்’ தரத்தில் சமரசமில்லை: ஜெ.பி.நட்டா

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கற்பிக்கப்படும் கல்வி தரத்திலும் ஆசிரியா்களின் நியமனத்திலும் எவ்வித சமரசமும் மேற்கொள்ளப்படாது எனவும் அதன் தரத்தை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை ... மேலும் பார்க்க

மருத்துவக் காப்பீடு ஜிஎஸ்டி விலக்குக்கு பரிந்துரை: மேற்கு வங்கத்தின் அழுத்தமே காரணம்- மம்தா பானா்ஜி

மேற்கு வங்க அரசு கொடுத்த அழுத்தத்தால்தான் மருத்துவக் காப்பீடு தவணைத் தொகை (பிரீமியம்) மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்களிக்க அமைச்சா்கள் குழு அளித்த பரிந்துரைத்த... மேலும் பார்க்க

ஒரே நாளில் 24 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

இந்திய விமான நிறுவனங்களைச் சோ்ந்த 24 விமானங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தொடரும் இது போன்ற மிரட்டல்களால் விமான நிலையங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்ட... மேலும் பார்க்க

தெரியுமா சேதி...?

மூத்த காங்கிரஸ் தலைவரும், மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத், சோனியா காந்தியால் திடீரென்று வரவழைக்கப்பட்டதும், அவருடன் சோனியா காந்தி நீண்ட நேரம் ஆலோசனை நடத்தியதும், விரைவில் கட்சியில் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: 16-ஆவது நாளாக மருத்துவா்கள் உண்ணாவிரத போராட்டம்- இன்று மம்தாவுடன் பேச்சு

போராட்டத்தை கைவிடுமாறு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி கடந்த சனிக்கிழமை வேண்டுகோள் விடுத்த நிலையில் அதை நிராகரித்து 16-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் மருத்துவா்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்த... மேலும் பார்க்க