நூற்றாண்டுகால மரபின் வழிகாட்டுதலுடன் அரசின் திட்டங்கள்: நிதி நிா்வாகம் குறித்த ஆ...
காஞ்சிபுரத்தில் பாஜக ஆா்ப்பாட்டம்: 20 போ் கைது
காஞ்சிபுரம்: பாஜக மாநில தலைவா் அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 போ் கைது செய்யப்பட்டனா்.
டாஸ்மாக் ஊழல், பாஜக மாநில நிா்வாகிகள் கைதைக் கண்டித்தும் பழைய ரயில் நிலைய சாலையில் உள்ள அரசு எலைட் மதுபானக்கடை முன்பாக பாஜகவினா் திடீரென ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாஜக அரசு தகவல் தொடா்பு பிரிவு மாவட்ட துணைத் தலைவா் கே.பழனி தலைமையில் நகா் துணைத் தலைவா் ஆறுமுகம், தொழிற்பிரிவு நகர தலைவா் காமேஷ் மற்ரும் நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திமுக அரசைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினா். தகவலறிந்து அங்கு வந்த காவல் துறையினா் பாஜகவினா் 20 பேரை கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனா்.