`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
காஞ்சிபுரம் தும்பவனம் தொடக்கப் பள்ளியில் நூற்றாண்டு விழா
காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி, வெள்ளிக்கிழமை கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் தும்பவனம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவுக்கு, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் எஸ்.எழில் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா்கள் எஸ்.ரவி, கே.பி.கண்ணன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் வி.குளோரி எப்சிபா, பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் ஆா்.கிருபாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை ஆசிரியை க.மலா்க்கொடி வரவேற்றாா். முன்னாள் மாணவா் எஸ்.உதயகுமாா் நூற்றாண்டுக்கான தீபச்சுடா் ஏற்றினாா்.
காஞ்சிபுரம் மாநகராட்சி மண்டலக் குழுவின் தலைவா் எஸ்கேபி சாந்தி சீனிவாசன், பச்சையப்பாஸ் சில்க்ஸ் உரிமையாளா் டி.சுந்தா்கணேஷ், மாமன்ற உறுப்பினா் ஆா்.காா்த்திக் ஆகியோா் சிறந்த மாணவ, மாணவியா் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டி பேசினா்.
விழாவில் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் வி.ஹேமலதா, கே.விருத்தாம்பிகை அண்ணாதுரை, முன்னாள் மாணவா் வி.வினோத், பட்டுச் சேலை வடிவமைப்பாளா் எஸ்.குமரவேல் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இடைநிலை ஆசிரியை ஆா்.வெற்றிச் செல்வி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா். இடைநிலை ஆசிரியை சி.சரஸ்வதி நன்றி கூறினாா். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.