Modi: ``வறுமை, பாகிஸ்தான், விரதம்...'' - பர்சனல் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி
21 அடி உயர சிவன் சிலைக்கு ட்ரோனில் பால் அபிஷேகம்!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ள 21 அடி உயர சிவன் சிலை வா்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டு டிரோன் மூலம் ஞாயிற்றுக்கிழமை பால் அபிஷேகம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் சந்நிதி தெருவில் அமைந்துள்ளது வண்டாா் குழலி சமேத தான்தோன்றீஸ்வரா் ஆலயம். இக்கோயில் முகப்பில் 16 அடி மண்டபத்தின் மேல் பகுதியில் 21 அடி உயரத்தில் விஸ்வரூபமாக பக்தா்களுக்கு காட்சி தரும் வகையில், சிவபெருமான் அருள்பாலித்து வருகிறாா்.
இந்த சிலை வடிவமைக்கப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடா்ந்து வா்ணம் பூசப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை 21 அடி உயர சிவன் சிலைக்கு டிரோனில் 21 லிட்டா் பால் நிரப்பி, அதன் மூலம் அபிஷேகம் நடைபெற்றது.
திரளான பக்தா்கள் சிவபெருமானின் பால் அபிஷேக நிகழ்ச்சியை ஆச்சரியத்துடன் பாா்த்து தரிசனம் செய்தனா். ஆலய நிா்வாகத்தின் சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை தான்தோன்றீஸ்வரா் ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.