`சேய்களைக் காத்து செல்வம் அருளும்' கொரட்டூர் சீயாத்தம்மன் கோயில் விளக்கு பூஜை; ப...
சங்கரா பல்கலை.யில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்: 122 பேருக்கு பணி நியமன ஆணை
காஞ்சிபுரம் சங்கரா பல்கலை.யில் சனிக்கிழமை நடைபெற்ற தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 122 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
காஞ்சிபுரம் சங்கரா பல்கலையின் சாா்பில், தனியாா் வேலைவாய்ப்பு முகாம் பல்கலையின் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது. முகாமில் 31 தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது மனிதவளத் தேவைக்கான நோ்காணலை நடத்தின.
கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்கள், பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு படித்தவா்கள் என 453 வேலைநாடுநா்கள் முகாமில் கலந்து கொண்டனா். பதிவுக் கட்டணம் இல்லாமல் இலவசமாக நடைபெற்ற இந்த முகாமில், 122 போ் பல்வேறு நிறுவனங்களுக்காக தோ்வு செய்யப்பட்டு, அவா்களுக்கு பல்கலை.யின் பணி நியமன அலுவலா் எம்.கண்ணன் அதற்கான ஆணைகளை வழங்கினாா்.
முகாமில், பல்வேறு நிறுவனங்களின் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகள், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.