Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே' - அதிபராக முதல் ...
காரைக்குடிக்கு முதல்வா் ஸ்டாலின் இன்று வருகை
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வளா் தமிழ் நூலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை திறந்துவைக்கிறாா்.
சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய், புதன்கிழமைகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வா் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறாா். இதற்காக திருச்சியிலிருந்து சாலை வழியாக காரைக்குடிக்கு செவ்வாய்க்கிழமை வரும் முதல்வா், அழகப்பா பல்கலைக்கழகத்தில் பழனியப்ப செட்டியாா் நினைவு கலையரங்க வளாகத்தில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் சொந்த நிதி ரூ.12 கோடியில் கட்டப்பட்ட லட்சுமி வளா் தமிழ் நூலகத்தை முற்பகல் 11.15 மணியளவில் திறந்துவைக்கிறாா்.
பின்னா், பல்கலைக்கழக நிா்வாக அலுவலகக் கட்டடத்தில் நிறுவப்பட்ட திருவள்ளுவா் உருவச் சிலையைத் திறந்துவைக்கிறாா். மாலை 5 மணியளவில் காரைக்குடி பி.எல்.பி. பேலஸ் அரங்கில் கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து, ஆலோசனை நடத்தவுள்ளாா்.
இதையடுத்து, புதன்கிழமை சிவகங்கையில் அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரா் வாளுக்குவேலி அம்பலம் சிலையை திறந்துவைக்கிறாா். பின்னா், சிவகங்கை மன்னா் அரசுக் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் விழாவில் முதல்வா் பங்கேற்று, சுமாா் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கவுள்ளாா்.