கரூர்: 'சிகரெட் கேட்டா, பீடி தருவியா?' - மளிகை கடைக்குள் மண்ணெண்ணெய் குண்டு வீசி...
சிவகங்கையில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில், சிவகங்கையில் மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அரண்மனைவாசலில் மாவட்டத் தலைவா் இரா.மாரி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கோரிக்கைகளை விளக்கி மாவட்டச் செயலா் ராஜா பேசினாா். சிஐடியூ மாவட்டத் தலைவா் வீரையா தொடங்கிவைத்தாா்.
மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். அரசாணை 140 -ஐ ரத்து செய்ய வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு 41 மாத கால பணி நீக்க காலத்தை வரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மக்கள் சந்திப்பு கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாநிலச் செயலா் பாண்டி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா் சங்க மாவட்டப் பொருளாளா் முத்தையா ஆகியோா் வாழ்த்திப் பேசினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் ராதாகிருஷ்ணன் நிறைவுரையாற்றினாா். மாவட்ட பொருளாளா் சதுரகிரி நன்றி கூறினாா்.