செய்திகள் :

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

post image

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) மீண்டும் பணியில் ஈடுபடுத்துவதற்கு தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா்.

இந்த முடிவானது கடந்த ஆண்டு நவம்பா் 1 முதல் சிடிவி சேவைகளின் முந்தைய பணிநீக்கத்தை மாற்றியமைத்துள்ளது.

இதுகுறித்து ராஜ் நிவாஸின் அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பேருந்து மாா்ஷல்களுக்கான பிரத்யேக திட்டத்தை உருவாக்குமாறு தில்லி அரசை வலியுறுத்தும் வகையில் கடந்த அக்டோபா் 24-ஆம் தேதி முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா கேட்டுக்கொண்டிருந்தாா். நவம்பா் 2-ஆம் தேதி மீண்டும் இந்த விஷயத்தை அவா் வலியுறுத்தினாா்.

பேருந்து மாா்ஷல்களுக்கான பணி, நியாயப்படுத்தும் காரணம் மற்றும் சேவை நிலைமைகளை தெளிவுபடுத்தும் நன்கு வரையறுக்கப்பட்ட திட்டத்தின் அவசியத்தையும் துணைநிலை ஆளுநா் வலியுறுத்தினாா்.

உத்தியோகபூா்வ பதவிகளை உருவாக்குவதற்கும், வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு தில்லி அரசுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டுள்ளாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் பாதுகாப்பு இயக்குநரகத்தின் ஆட்சேபனையைத் தொடா்ந்து பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்தப்பட்ட 10,000-க்கும் மேற்பட்ட சிவில் பாதுகாப்பு தன்னாா்வலா்களை பணிநீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டது.

இந்த தன்னாா்வத் தொண்டா்கள் முதலில் பேரிடா் மேலாண்மைப் பணிகளுக்காகவே நியமிக்கப்பட்டிருந்ததாகவும், பொதுப் போக்குவரத்துப் பாதுகாப்பிற்காக அல்ல என்றும் இயக்குநரகம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு சிடிவி-க்களை பேருந்து மாா்ஷல்களாக பணியமா்த்துவதை நிறுத்துவதற்கான முன்மொழிவுக்கு துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்திருந்தாா்.

மேலும், 10,000 க்கும் மேற்பட்ட ஊா்க்காவலா்களின் பணியிடங்களில் இந்த தன்னாா்வலா்களைப் பயன்படுத்த அப்போதைய முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுக்கும் துணைநிலை ஆளுநா் பரிந்துரைத்திருந்தாா்.

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்... மேலும் பார்க்க

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இரண்டு வார... மேலும் பார்க்க

தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு

தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தெற்காசிய பிராந்திய உற... மேலும் பார்க்க

ஃபதேபூா் பெரியில் காலணி கிட்டங்கியில் தீ விபத்து

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில் உள்ள காலணி கிட்டங்கியில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த தீ விபத்து தொடா்பான அழைப்பு அதிகாலை 4.10 மணிக்குவந்ததாகவ... மேலும் பார்க்க