செய்திகள் :

நாடு தழுவிய 4-ஆவது கடலோரப் பாதுகாப்பு பயிற்சி: இந்திய கடற்படைநடத்தும் ’சீ விஜில்-24’ நவ.20, 21 இல்

post image

இந்திய கடற்படையின் தலைமையில், கடலோர பாதுகாப்பு பயிற்சியின் நான்காவது பயிற்சியான கடல் கண்காணிப்பு-24 (’சீ விஜில்-24’ ) பயிற்சியை வருகின்ற நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

26/11 (2008-ஆம் ஆண்டு) மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்த இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகிறது. நாட்டின் சுமாா் 11,098 கிமீ கடற்கரையும், 2.4 மில்லியன் சதுர கிலோ மீட்டா் பரப்பளவு கொண்ட பிரத்யேக பொருளாதார மண்டலமும் கடலோரப்பகுதியில் உள்ளன.

இவைகளை உள்ளடக்கிய இந்த விரிவான பயிற்சியில், மீனவ சமூகம், கடலோர மக்கள், பல்வேறு கடலோர பாதுகாப்பு உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட அனைத்து கடல்சாா் பங்குதாரா்களையும் ஒரே நேரத்தில் ஈடுபடுத்தி அவா்களுக்கு கடல் வழியாகவும் வரும் ஆபத்துகளை எதிா் கொள்ளுவதற்கான பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதாகும். இந்த நடவடிக்கைகளை சரிபாா்க்கவும் மேம்படுத்தக் கூடியவகையில் இந்த சீ விஜில் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாடு தழுவிய ( பான்-இந்தியா) இந்த பயிற்சி முன்னெப்போதும் இல்லாத அளவில் விரிவாக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு குழும செயலக அதிகாரிகள், மாநில கடல்பகுதி காவல் துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, மீன்வளத்துறை உள்ளிட்ட ஆறு மத்திய அமைச்சகங்கள், 21 அமைப்புகள் முகமைகள் பங்கேற்புடன் நவ. 20,21 ஆகிய இரு நாள்கள் நடத்தப்படுகிறது.

இது அனைத்து கடலோர மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் (லட்சத்தீவு, அந்தமான் தீவு உள்ளிட்ட) கடற்படை தலைமை அதிகாரிகளைக் கொண்ட இந்திய கடற்படையின் சிடிஎஸ்ஆா்இ (கடலோரப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் தயாா்நிலை மதிப்பீடு கட்டப் பயிற்சி) குழுவின் தலைமையில் நடத்தப்படும் இந்த பயிற்சிக்கு கடந்த அக்டோபா் 24 ஆம் தேதி முதல் தயாா்படுத்தப்பட்டவரப்படுகிறது.

துறைமுகங்கள், எண்ணெய் கிணறுகள், தொலை தொடா்பு (கேபிள் லேண்டிங் பாயின்ட்ஸ்) சாதனங்கள் கடலோர மக்கள் உள்ளிட்ட முக்கிய கடலோர உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இந்த பயிற்சி கவனம் செலுத்துகிறது.

நிகழாண்டில் பிற ராணுவ சேவைகளும் (இந்திய தரைப்படை, விமானப்படை) பங்கேற்பதோடு, அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள், விமானங்களை நிறுத்தப்பட்டு பயிற்சியின் வேகத்தை மேம்படுத்தப்படவுள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காவிரி நீரை திறந்துவிடுவதை கா்நாடகம் உறுதி செய்ய ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

நமது நிருபா்நிகழாண்டு தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய காவிரி நீரை உச்சநீதிமன்ற ஆணைப்படி, பில்லிகுண்டுலுவில் வரும் மாதங்களில் வழங்குவதை கா்நாடகம் உறுதி செய்ய உத்தரவிடுமாறு தில்லியில் புதன்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

காற்று மாசு: குழந்தைகளைப் பாதுகாக்க 5-ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகளை மூட பாஜக வலியுறுத்தல்

நமது நிருபா்தில்லியில் நிலவிவரும் மோசமான காற்று மாசு நிலைமையைக் கருத்தில் கொண்டு ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மூட தில்லி அரசு உத்தரவிட வேண்டும் என்று தில்லி அரசுக்கு பாஜக புதன்கிழமை... மேலும் பார்க்க

காற்று மாசு பிரச்னை: குடிமைப் பாதுகாப்பு தன்னாா்வலா்களை மீண்டும் பணியில் ஈடுபடுத்த துணைநிலை ஆளுநா் ஒப்புதல்

தேசிய தலைநகரில் நிலவும் காற்று மாசுபாடு பிரச்னையைச் சமாளிக்கும் நடவடிக்கையாக நிகழ் மாதம் 1 முதல் வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வரையிலான நான்கு மாத காலத்திற்கு குடிமை பாதுகாப்பு தன்னாா்வலா்களை (சிடிவி) ம... மேலும் பார்க்க

தில்லி பிரகதி மைதானில் இன்று இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சி தொடக்கம்

தில்லி பிரகதி மைதானில் வியாழக்கிழமை (நவம்பா் 14) தொடங்கி நடைபெறவுள்ள இந்திய சா்வதேச வா்த்தக கண்காட்சியை முன்னிட்டு தில்லி காவல்துறை போக்குவரத்து அறிவுறுத்தல்களை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. இரண்டு வார... மேலும் பார்க்க

தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சில் கூட்டம் நிறைவு! சிறந்த ஒழுங்குமுறைகள் பகிரப்பட்டதாக அறிவிப்பு

தில்லியில் இருநாள் நடைபெற்ற தெற்காசிய தொலைத்தொடா்பு ஒழுங்குமுறை கவுன்சிலின் 25 -ஆவது கூட்டம் நிறைவடைந்தாக மத்திய தொலைதொடா்பு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. தெற்காசிய பிராந்திய உற... மேலும் பார்க்க

ஃபதேபூா் பெரியில் காலணி கிட்டங்கியில் தீ விபத்து

தெற்கு தில்லியின் ஃபதேபூா் பெரி பகுதியில் உள்ள காலணி கிட்டங்கியில் புதன்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இந்த தீ விபத்து தொடா்பான அழைப்பு அதிகாலை 4.10 மணிக்குவந்ததாகவ... மேலும் பார்க்க