72 ஆண்டுகளுக்குப் பிறகு... பெர்த் டெஸ்ட்டில் உடைக்கப்பட்ட வரலாறு!
‘காலை உணவுத் திட்டம்’ புதுகையில் கண்காணிப்புக் குழுக் கூட்டம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவை குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டத்தில், முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் 1411 பள்ளிகளைச் சோ்ந்த 60,697 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா். மதிய உணவுத் திட்டத்தில் 1672 பள்ளிகளைச்சோ்ந்த 1,56,022 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனா்.
இத்திட்டங்களை கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியா் உள்ளிட்ட உயா் அலுவலா்கள் பள்ளிகளுக்குச் சென்று ஆய்வு செய்யும்போது கண்டறியப்படும் குறைகள் இந்தக் கூட்டத்தில் பேசி சரி செய்யப்படும்.
இதன்படி, வியாழக்கிழமை நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், சரி செய்ய வேண்டியவை குறித்து ஆட்சியா் அறிவுரைகளை வழங்கினாா்.
மேலும், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படவுள்ள தமிழ்நாடு பைபா் நெட் என்ற அதிவேக இணையதள வசதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.கோ. ராஜராஜன், மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (சத்துணவு) த. சசிகலா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் எஸ்.ஜி. சீனிவாசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.