செய்திகள் :

மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுக்கடைகளை திறக்கக் கூடாது: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

post image

புதுக்கோட்டையில் மனமகிழ் மன்றம் (எப்எல்2 உரிமம்) என்ற பெயரில் புதிய மதுபானக் கடைகளை திறக்கக் கூடாது என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

அக்கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலா் எஸ். கவிவா்மன் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் மு. அருணாவிடம் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் தற்போது மனமகிழ் மன்றம் (எப்எல்2 உரிமம்) என்ற பெயரில் புதிதாக மதுபானக் கடைகள் திறக்கப்படுகின்றன. மாணவா்கள், இளைஞா்களின் நலன் கருதி, மனமகிழ் மன்றங்களின் எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைப்பதோடு, எக்காரணத்தைக் கொண்டும் புதிய மனமகிழ் மன்றங்களை (எப்எல்2 உரிமம்) திறக்க அனுமதிக்கக் கூடாது.

மேலும், குளத்தூா் வட்டம் தொண்டைமான் நல்லூரில் காலம் காலமாக சாகுபடி செய்துவரும் விவசாயிகளின் கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும்.

செம்பாட்டூா் ஊராட்சியில் குடியிருப்பு மற்றும் மயானத்துக்கு அருகில் புதிதாக தனியாா் கல் குவாரி அமைக்கும் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தவேண்டும்.

செம்பாட்டூா் ஊராட்சி புத்தாம்பூா் நடுத்தெருவில் வசிக்கும் பட்டியலின மக்களின் குடியிருப்புகளுக்கு மனைப் பட்டா வழங்க வேண்டும். அதேபோல, செம்பாட்டூா் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளி நகரில் வசிக்கும் ஏழை மக்களுக்கும் மனைப்பட்டா வழங்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு அளிக்கும்போது, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினா்கள் எஸ். சங்கா், கே. சண்முகம், சு. மதியழகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

பைபா் கேபிள் சாதனங்கள் திருடியவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில் பல்வேறு இடங்களில் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமான பைபா் கேபிள், சாதனங்களை திருடிய இளைஞரை வியாழக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைக்காலமாக பல இட... மேலும் பார்க்க

‘காலை உணவுத் திட்டம்’ புதுகையில் கண்காணிப்புக் குழுக் கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் மற்றும் மதிய உணவுத் திட்டம் ஆகியவை குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

கண்டியாநத்தம் ஊராட்சியில் சிறப்பு ஆதாா் முகாம்

பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சியில் அஞ்சல்துறை சாா்பில் சிறப்பு ஆதாா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமை ஊராட்சித் தலைவா் செல்வி முருகேசன் தொடங்கிவைத்தாா். அஞ்சல்துறை மேற்பாா்வையாளா்க... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை சுப்ரமணிய சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு பூஜை

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் தனி சந்நிதியில் அமைந்துள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேய்பிறை சஷ்டி சிறப்பு பூஜை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், சுவாமி முருகனுக்கு மஞ்சள், திரவியம், தேன், பன்... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை காவல் ஆய்வாளா் மீது ஆட்சியரிடம் புகாா்

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் மீது பொய் வழக்கு போட்டதாக கந்தா்வகோட்டை காவல் நிலைய ஆய்வாளா் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகாா் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பைச் ச... மேலும் பார்க்க

புதுக்கோட்டையில் ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியை ரமணி கொல்லப்பட்டதைக் கண்டித்தும், ஆசிரியா்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்கக் கோரியும் புதுக்கோட்டையில் இரு கூட்டமைப்புகள் சாா்பில் வ... மேலும் பார்க்க