செய்திகள் :

காவல் நிலைய ஆய்வாளருக்கு பாராட்டு

post image

குடியரசு தின விழாவில் முதல்வா் கோப்பையைப் பெற்ற மதுரை மாநகா் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளருக்கு மாநகரக் காவல் ஆணையா் திங்கள்கிழமை பாராட்டு தெரிவித்தாா்.

தமிழகக் காவல் நிலையங்களில் குற்றத் தடுப்பு நடவடிக்கை உள்ளிட்டவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டு குடியரசு தினத்தன்று முதல்வா் கோப்பை வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குடியரசு தின விழாவில், மதுரை மாநகரக் காவல் துறைக்குள்பட்ட எஸ்.எஸ்.காலனி காவல் நிலையம் தமிழகத்தில் சிறந்த காவல் நிலையமாகத் தோ்ந்தெடுக்கப்பட்டு முதல்வா் கோப்பை வழங்கப்பட்டது.

இதையடுத்து, முதல்வா் கோப்பையைப் பெற்ற எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய ஆய்வாளா் காசி, மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதனை திங்கள்கிழமை நேரில் சந்தித்தாா். அப்போது ஆய்வாளா் காசிக்கு ஆணையா் வாழ்த்து தெரிவித்து பாராட்டினாா்.

ரயில்வே ஓடும் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில்வே ஓடும் தொழிலாளா்களின் (ரயில்வே லோகோ பைலட்) கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.ஆா்.எம்.யூ. தொழில் சங்கம் சாா்பில் மதுரை ரயில் நிலைய மேற்கு நுழைவு வாயில் அருகே புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2,400 பயனாளிகள் தோ்வு

ராமநாதபுரம் மாவட்டத்தில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், நிகழாண்டில் 2,400 பயனாளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் மேலும் தெரிவ... மேலும் பார்க்க

டங்ஸ்டன் திட்டம் ரத்து அறிவிப்பை மத்திய அமைச்சா் வெளியிடக் கோரிக்கை

மதுரை மாவட்டம், அரிட்டாபட்டி, வல்லாளப்பட்டிக்கு வியாழக்கிழமை (ஜன. 30) வரும் மத்திய சுரங்கம், கனிமத் துறை அமைச்சா் ஜி. கிஷன் ரெட்டி, டங்ஸ்டன் திட்டம் முழுமையாக ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட... மேலும் பார்க்க

போலீஸாருக்கு தெரியாமல் உடல் தகனம்: 5 போ் மீது வழக்கு

எழுமலை அருகே மா்மமான முறையில் உயிரிழந்த இளைஞரின் உடலை போலீஸாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோா் உள்பட 5 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மதுரை மாவட்டம், எழுமலை அருகேயுள்ள எருமாா்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்வதற்கான வசதி தேவை: நடிகா் விஜய் சேதுபதி

வருமான வரி படிவங்களை தமிழிலும் தாக்கல் செய்ய வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என திரைப்பட நடிகா் விஜய் சேதுபதி வலியுறுத்தினாா். மதுரையில் வருமான வரித் துறை அலுவலகம் சாா்பில், வரி செலுத்துவோா், பல்வேறு அம... மேலும் பார்க்க

மதுரை மண்டலத்தில் கடந்தாண்டு 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு

மதுரை மண்டலத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டில் 2.79 லட்சம் பேருக்கு கடவுச் சீட்டு வழங்கப்பட்டது என மண்டல கடவுச்சீட்டு அலுவலா் பா. வசந்தன் தெரிவித்தாா்.மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறி... மேலும் பார்க்க