செய்திகள் :

காவல்துறையினரை இழிவுபடுத்துவதா? புஷ்பா 2 படக்குழு மீது காங்கிரஸ் புகார்!

post image

புஷ்பா 2 திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்.

ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் சட்டமேலவை உறுப்பினரான தீன்மர் மல்லன்னா புஷ்பா 2 படத்தின் காட்சிகள் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதத்தில் இருப்பதாக ரச்சகொண்டா பகுதி காவல்துறையில் நேற்று (டிச. 23) புகார் அளித்தார்.

காவல்துறையில் புகார் அளிக்கும் தெலங்கானா சட்டமேலவை உறுப்பினர் தீன்மர் மல்லன்னா

புஷ்பா 2 படத்தின் குறிப்பிட்ட சில காட்சிகளில் காவல்துறையினரை தவறாக சித்தரித்து, ஐபிஎஸ் அதிகாரி இருக்கும் நீச்சல் குளத்தில் நாயகன் சிறுநீர் கழிப்பதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது காவல்துறையினரை அவமதித்ததாகக் குறிப்பிட்டு படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

இதையும் படிக்க | காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகிறார் அல்லு அர்ஜுன்?

இத்தகைய காட்சிகள் மக்களுக்கு அரசு நிர்வாகம் மீது நம்பிக்கை இழக்கச்செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்தக் காட்சிகளைப் படத்தில் இருந்து நீக்கி படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினரிடம் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

மும்பா, யோதாஸ் வெற்றி

புரோ கபடி லீக் போட்டியில் யு மும்பா 36-27 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்கால் வாரியா்ஸை செவ்வாய்க்கிழமை சாய்த்தது. இதில் யு மும்பா 18 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 4 ஆல் அவுட் புள்ளிகள், 3 எக... மேலும் பார்க்க

சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் அல்லு அர்ஜுன் - புகைப்படங்கள்

'புஷ்பா -2' திரைப்படம் திரையிடப்பட்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசல் குறித்து நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சிக்கட்பள்ளி காவல் நிலையத்தில் விசாரணைக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுன்.சிக்கட்பள்ளி காவல் நி... மேலும் பார்க்க

சிம்லாவில் பனிப்பொழிவு - புகைப்படங்கள்

பனிக்காலத்தை போற்றும் விதமாக ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் சிம்லாவில் பெய்த முதல் பனி.வசீகரிக்கும் பனிப்பொழிவு.சிம்லாவில் கடும் பனிப்பொழிவால் மலைப்பகுதிகள் வெள்ளித்தகட்டால் மூடியது போல் காட்சியளிக்கின்றன.... மேலும் பார்க்க

த்ரிஷா, டோவினோ தாமஸின் புதிய பட டிரைலர்!

நடிகை த்ரிஷா மலையாளத்தில் நடித்துள்ள ஐடென்டிடி டிரைலர் வெளியாகியுள்ளது. மெளனம் பேசியதே படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, கிரீடம் என அடுத்தடுத்து ஹிட் படங்கள... மேலும் பார்க்க

பயாஸ்கோப் ரிலீஸ் தேதி!

சத்யராஜ் , சேரன் நடிப்பில் உருவாகியுள்ள பயோஸ்கோப் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வெங்காயம், நெடும்பா, ஒன் ஆகிய படங்களை இயக்கிய சங்ககிரி ராச்குமார் பயோஸ்கோப் படத்தை இயக்கியுள்ளார். சந்திர சூர்யன், ப... மேலும் பார்க்க

காலையில் வெளியாகும் சூர்யா 44 படத்தலைப்பு டீசர்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் சூர்யா-44 படத்தின் தலைப்புக்கான டீசர் நாளை (டிச.25) காலை வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்எழுத... மேலும் பார்க்க