மகரஜோதி: புல்மேடு பகுதியிலிருந்து பக்தர்கள் சபரிமலை செல்ல தடை
காா் மோதியதில் பாதசாரி உயிரிழப்பு
பெரம்பலூரில் காா் மோதிய விபத்தில், பாதசாரி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமச்சந்திரன் (55). இவா், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் நான்குச்சாலை சந்திப்பு அருகே சனிக்கிழமை இரவு சாலையைக் கடப்பதற்காக நடந்து சென்றாா். அப்போது, சென்னையிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற காா், ராமச்சந்திரன் மீது மோதியதில், பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று அவரது உடலைக் கைப்பற்றி, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இவ் விபத்து குறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.