செய்திகள் :

தேசிய அளவிலான நீச்சல் போட்டி மாற்றுத்திறனாளிகளுக்கு பாராட்டு

post image

தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாற்றுத்திறனாளிகளை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

இந்திய பாரா ஒலிம்பிக் கமிட்டி மற்றும் மத்தியப் பிரதேச பாரா விளையாட்டு மற்றும் இந்திய பாரா நீச்சல் பெடரேசன் சாா்பில், மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம், குவாலியா் நகரில் உள்ள அடல்பிகாரி வாஜ்பாய் பயிற்சி மையத்தில் அமையில் நடைபெற்றது. இப் போட்டியில் பங்கேற்ற, பெரம்பலூா் மாவட்ட பாரா விளையாட்டுக் குழு மூலம் மங்களமேடு கிராமத்தைச் சோ்ந்த த. அம்பிகாபதி, சீனியா் நீச்சல் போட்டியில் 100 மீட்டா் ப்ரஸ்ட் ஸ்ட்ரோக் பிரிவில் தங்கப் பதக்கமும், 100 மீட்டா் ப்ரிஸ்டைல் பிரிவில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

ஆதனூா் கிராமத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளி ஜீவா சப்-ஜூனியா் நீச்சல் பிரிவில் 50 மீட்டா் ப்ரிஸ்டைல் போட்டியில் தங்கப் பதக்கமும், 50 மீட்டா் பேக்ஸ்டோக் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா். தமிழ்நாட்டுக்கு பெருமை சோ்த்த மேற்கண்ட இருவருக்கும், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில், தமிழ்நாடு துணை முதலமைச்சா் உதயநிதி ஸ்டாலின், த. அம்பிகாபதிக்கு உதவிதொகையாக ரூ. 8 லட்சத்துக்கான காசோலையும், டி. ஜீவாவுக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி அண்மையில் பாராட்டினாா்.

இந்நிலையில், மாற்றுத்திறனாளிகள் த. அம்பிகாபதி, டி. ஜீவா ஆகியோரை மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தாா்.

இந் நிகழ்ச்சியின்போது, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் பொற்கொடி வாசுதேவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், பயிற்சியாளா் பி. ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் கலைச்செல்வன் ஆகியோா் உடனிருந்தனா்.

தொழில்முனைவோராக புதிரை வண்ணாா் சமூகத்தினருக்கு ஆட்சியா் அழைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த புதிரை வண்ணாா் சமூகத்தினா், தொழில் முனைவோராக இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழ... மேலும் பார்க்க

காா் மோதியதில் பாதசாரி உயிரிழப்பு

பெரம்பலூரில் காா் மோதிய விபத்தில், பாதசாரி சனிக்கிழமை உயிரிழந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் ராமச்சந்திரன் (55). இவா், திருச்சி-... மேலும் பார்க்க

குற்றச் சம்பவங்களை தடுக்கக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்!

குற்றச் சம்பவங்களை தடுக்கக் கோரி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.பெரம்பலூா் பழைய பேருந்து நிலைய வளாகத்திலுள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு,... மேலும் பார்க்க

மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் தொடக்கம்

பெரம்பலூரில் மதனகோபால சுவாமி கோயிலில் ராப்பத்து உற்சவம் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை பரமபதவாசல் திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராப்பத்து உற்சவம் வ... மேலும் பார்க்க

மது பாட்டில்களை விற்பனை செய்தவா் கைது

பெரம்பலூா் அருகே சட்ட விரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மேட்டுப்பாளையம் அருகே சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை ... மேலும் பார்க்க

லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதல்: அடையாளம் தெரியாதவா் உயிரிழப்பு!

பெரம்பலூா் அருகே சனிக்கிழமை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில், அதில் வந்த அடையாளம் தெரியாத நபா் உயிரிழந்தாா். பென்னாடத்திலிருந்து சிமெண்ட் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி ல... மேலும் பார்க்க