சம்பல் வன்முறை: சமாஜவாதி எம்.பி.க்கள் குழு தடுத்து நிறுத்தம்
காா் மோதியதில் முதியவா் பலி
சூளகிரி அருகே காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
ஒசூா், நேரு நகா் திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் முரளி (64). இவா் கடந்த 28-ஆம் தேதி கிருஷ்ணகிரி -ஒசூா் சாலையில் காமன்தொட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அந்த வழியாக வந்த காா் அவா் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த முரளி உயிரிழந்தாா். இது குறித்து சூளகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.