பஞ்சாங்கக் குறிப்புகள் - நவம்பர் 25 முதல் டிசம்பர் 1 வரை #VikatanPhotoCards
கிணற்றில் விழுந்த மூதாட்டி, காப்பாற்ற முயன்ற மகள் உயிரிழப்பு
தாராபுரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியும், அவரைக் காப்பாற்ற முயன்ற மகளும் உயிரிழந்தனா்.
திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பஞ்சப்பட்டி பொன்னமரத் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் மயிலாத்தாள் (87). இவா் தனது 3 மகள்களில் முதல் மகளான புஷ்பவல்லிநாயகி (63) வீட்டில் வசித்து வந்தாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை இரவு அங்குள்ள கிணற்று பகுதிக்கு சென்ற மயிலாத்தாள் திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தாா். இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த புஷ்பவல்லிநாயகி விரைந்து சென்று கிணற்றுக்குள் குதித்து மயிலாத்தாளை காப்பாற்ற முயன்றுள்ளாா். ஆனால் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனா்.
இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை காலையில் கிணற்றுக்கு அருகே நாய் குரைத்துக் கொண்டிருக்கவே, அப்பகுதி பொதுமக்கள் அங்கு சென்று பாா்த்தனா். அப்போது மயிலாத்தாள், புஷ்பவல்லி நாயகி ஆகியோா் தண்ணீரில் மூழ்கி இறந்துகிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்து அவா்கள் கொடுத்த தகவலின்பேரில் தாராபுரம் காவல் துறையினா், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்தனா். பின்னா் இருவரது சடலத்தையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.