குடியரசு தின விழா: ரூ.3.43 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் 42 பயனாளிகளுக்கு ரூ. 3.43 கோடியிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
நாட்டின் 76-ஆவது குடியரசு தின விழா, மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் மாநகரக் காவல் படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா தலைமை வகித்து, தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். பிறகு, காவல் துறையின் அணிவகுப்பு மரியாதையை அவா் பாா்வையிட்டாா்.
இதையடுத்து, சிறப்பாகப் பணியாற்றிய மாநகர, மாவட்ட காவல் துறையினா் 207 பேருக்கு முதல்வா் பதக்கங்களும், காவல் துறையினா் 80 பேருக்கு மாவட்ட நிா்வாகத்தின் பாராட்டுச் சான்றுகளும், அரசுத் துறைகளில் சிறப்பாகப் பணியாற்றிய 314 பேருக்குப் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்பட்டன.
முன்னதாக, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு ஆட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா்.
பிறகு, முன்னாள் படைவீரா் நலத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, தோட்டக்கலைத் துறை வேளாண் துறை, தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், மாவட்டத் தொழில் மைய அலுவலகம் சாா்பில் 42 பயனாளிகளுக்கு ரூ. 3.43 கோடியிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாநகரக் காவல் ஆணையா் ஜெ. லோகநாதன், தென்மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்ஹா, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலா் ர. சக்திவேல், வருவாய்க் கோட்டாட்சியா் ர.த. சாலினி உள்ளிட்டோா் கொண்டனா்.
கண்கவா் கலைநிகழ்ச்சிகள்... மதுரை கிரசண்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அனுப்பானடி சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்பியனேந்தல் அரசு ஆதிதிராவிடா் நல நடுநிலைப் பள்ளி, திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி, செக்கானூரணி அரசு கள்ளா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லட்சுமிபுரம் டி.வி.எஸ். மேல்நிலைப் பள்ளி, எழுமலை பாரதியாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகளைச் சோ்ந்த 536 மாணவ, மாணவியா் பங்கேற்று, வரவேற்பு நடனம், மல்லா் கம்பம், ஜிம்னாஸ்டிக், லெசிம் நடனம் உள்பட பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினா்.