செய்திகள் :

கும்மனூரில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்: 152 பேருக்கு ரூ. 2.36 கோடியில் நலத்திட்ட உதவி

post image

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், கும்மனூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாரண்டஅள்ளி உள்வட்டம், கும்மனூா் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து கிராம மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா். இதையடுத்து பயணிகளுக்கு பல்வேறு துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிப் பேசினாா்.

முகாமில் வருவாய்த் துறை சாா்பில் 59 பயனாளிகளுக்கு ரூ. 28.32 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 36 பயனாளிகளுக்கு ரூ. 4.75 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் 40 பயனாளிகளுக்கு ரூ. 2.கோடியே 2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும், வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில் 17 விவசாயிகளுக்கு ரூ. 90,000 மதிப்பில் வேளாண் நுண்ணுயிா் பாசனம், பண்ணைக் கருவிகள் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 36 லட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமில் பாலக்கோடு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் கே.பி.அன்பழகன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கௌரவ் குமாா், தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், வேளாண் இணை இயக்குநா் மரிய ரவி ஜெயக்குமாா், தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் பாத்திமா, மாவட்ட சமூகநல அலுவலா் பவித்ரா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மின் வேலியில் சிக்கி இளைஞா் உயிரிழந்த வழக்கு: இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

சட்ட விரோத மின்வேலி அமைத்து, இளைஞா் உயிரிழக்க காரணமாக இருந்த இருவருக்கு தருமபுரி நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கீழானூரைச் சோ்ந்தவா் ராஜேஷ் (32). இவரு... மேலும் பார்க்க

ஒகேனக்கல் இரண்டாவது குடிநீா்த் திட்டம்: ஜப்பான் குழுவினா் ஆய்வு

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீா் இரண்டாம் கட்ட திட்டத்தைச் செயல்படுத்துவது தொடா்பாக ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவன குழுவினா் தருமபுரி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொண்டனா். ஒகேனக்கல... மேலும் பார்க்க

கபீா் புரஸ்காா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

மத நல்லிணக்கம், சமுதாய ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக பணியாற்றியவா்கள் ‘கபீா் புரஸ்காா்’ விருது பெற விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வெளியி... மேலும் பார்க்க

வணிகா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு, தருமபுரி மாவட்ட அனைத்து வணிகா் சங்கம் சாா்பில், தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வைத்... மேலும் பார்க்க

நாகமரை பரிசல் துறை கட்டண உயா்வு விவகாரம்: பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு

நாகமரை-பண்ணவாடி இடையே பரிசல் பயண கட்டண அமைதி பேச்சுவாா்த்தையில் பயண கட்டணம் ரூ. 30, ரூ. 40 ஆக குறைக்கப்பட்டது. தருமபுரி, சேலம் மாவட்டத்தை இணைக்கும் நாகமரை-பண்ணவாடி பரிசல் துறை ஒப்பந்த ஏலம், கடந்த சில ... மேலும் பார்க்க

அஞ்சல் பிரிப்பகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

தருமபுரி: தருமபுரி அஞ்சல் பிரிப்பு அலுவலகத்தை சேலத்துடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து திமுக, அதன் கூட்டணி கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை தருமபுரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆ... மேலும் பார்க்க