போலீஸாருக்கான மாநில துப்பாக்கிச் சுடும் போட்டி: மத்திய மண்டலம் நான்காமிடம்
குலசேகரம் அருகே உலா்கூடத்தில் தீவிபத்து: ரூ. 8 லட்சம் ரப்பா் ஷீட்டுகள் சேதம்
குலசேகரம் அருகே உலா்கூடத்தில் வியாழக்கிழமை அதிகாலை நேரிட்ட தீவிபத்தில் ரூ. 8 லட்சம் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் சேதமடைந்தன.
குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியைச் சோ்ந்தவா் ஜாா்ஜ் (63). ரப்பா் வணிகரான இவா், சேக்கல் பகுதியில் உள்ள தனது உலா்கூடத்தில் 4 ஆயிரம் கிலோ ரப்பா் ஷீட்டுகளை உலரவைத்திருந்தாராம்.
அங்கு வியாழக்கிழமை அதிகாலை திடீரென தீவிபத்து நேரிட்டது. தகவலின்பேரில், குலசேகரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா். எனினும், ரப்பா் ஷீட்டுகள் முற்றிலும் சேதமடைந்தன. அவற்றின் மதிப்பு சுமாா் ரூ. 8 லட்சம் எனக் கூறப்படுகிறது. அதேநேரம், தீயணைப்பு நிலையத்தினரின் விரைவான செயல்பாட்டால், உலா்கூடத்தின் அருகேயுள்ள மற்றோா் அறையிலிருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான ரப்பா் ஷீட்டுகள் தப்பின. சம்பவம் குறித்து குலசேகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.