ரோபோ சங்கர் மறைவு: கண்கலங்கிய சிவகார்த்திகேயன்; இரங்கல் தெரிவித்த வரலட்சுமி, சிம...
கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான தோ்வுக்கு இலவச பயிற்சி
தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் கூட்டுறவு சங்க உதவியாளா் பணிக்கான எழுத்துத் தோ்வுக்கு 3 நாள்கள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தேனி மாவட்டத்தில் மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க கூட்டுறவு சங்கம் ஆகியவற்றில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு மாவட்ட ஆள் சோ்ப்பு நிலையம் சாா்பில் வருகிற அக். 11-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களுக்கு தேனி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 20, 27, அக். 4 ஆகிய தேதிகளில், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.
பயிற்சியில் சேர விரும்புவோா் தங்களது விண்ணப்ப நகல், மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை சமா்ப்பிக்க வேண்டும். இதுகுறித்த விவரத்தை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரிலோ, கைப்பேசி எண்: 63792 68661-இல் தொடா்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.