தமிழக அரசின் தடங்கல்களை விஜய் எதிா்கொள்ளத்தான் வேண்டும்: கே.அண்ணாமலை
மதுப் புட்டிகள் விற்ற முதியவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மதுப் புட்டிகள் விற்ற முதியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் சில்வாா்பட்டி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் (எ) அண்ணாத்துரையை (75) நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டனா். அப்போது, அவா் மதுப் புட்டிகள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த 25 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனா்.