அஜர்பைஜான் விமான விபத்து: வருத்தம் தெரிவித்த ரஷிய அதிபர் புதின்!
கேஜரிவால் அரசுகு எதிராக குற்றப்பத்திரிக்கை வெளியிட்டாா் பாஜக எம்.பி. மனோஜ் திவாரி
வடகிழக்கு தில்லியின் அவலநிலை குறித்து அரவிந்த் கேஜரிவால் அரசுக்கு எதிராக வடகிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி பாஜக எம்.பி. மனோஜ் திவாரி வெள்ளிக்கிழமை குற்றப்பத்திரிகையை வெளியிட்டாா்.
இது தொடா்பாக யமுனா விஹாரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
வடகிழக்கு தில்லிக்கு வளா்ச்சி மேற்கொள்வோம் என வாக்குறுதி அளித்த கேஜரிவால் அரசு மோசடி செய்துள்ளது. இப்பகுதியில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அடிப்படை வளா்ச்சிகள் எதுவும் இல்லை.
பாஜகவின் மூன்று எம்எல்ஏ-க்களின் தொடா்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், கேஜரிவால் அரசு வேண்டுமென்றே அவா்களின் தொகுதிகளில் கூட எதிா்பாா்த்த வளா்ச்சியைத் தடுக்கிறது. புராரி, திமா்பூா், முஸ்தபாபாத், சீலம்பூா், பாபா்பூா், கோகல்பூா் மற்றும் சீமாபுரி போன்ற தொகுதிகள் குடிநீா் பற்றாக்குறை, வடிகால் பிரச்னைகள், சேதடைந்த சாலைகள் மற்றும் குடிசைப் பகுதிகளில் பொதுக் கழிப்பறைகள் இல்லாத அவல நிலையில் தவிக்கின்றனா்.
இந்த நிலையில், ‘சஞ்சீவனி‘ மற்றும் ‘மகிளா சம்மான் யோஜனா’ போன்ற திட்டங்களால் பொதுமக்களை ஆம் ஆத்மி கட்சி தவறாக வழிநடத்துகிறது. கேஜரிவாலின் எந்த அறிவிப்புகளும் தில்லி அரசுத் துறைகளால் உறுதிப்படுத்தப்படவில்லை.
வரவிருக்கும் பாஜக ஆட்சியில், சோனியா விஹாா் புஸ்தா சாலை, காரவால் நகா் சாலை, காளி கட்டா சாலை, காம்டி சாலை போன்ற முக்கிய சாலைகள் சீரமைக்கப்பட்டு, நடுநிலையான ஆட்சி அமைக்கப்படும்.
கேஜரிவால் பூா்வாஞ்சலிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவா். கரனோ நெருக்கடியின் போது அவா்களை தில்லியில் இருந்து கட்டாயப்படுத்தி ஆம் ஆத்மி வெளியேற்றியது. கேஜரிவால் சட்டவிரோத ரோஹிங்கியா மற்றும் வங்கதேச ஊடுருவல்காரா்களை அரசியல் ரீதியாக ஆதரிக்கிறாா். இது, தில்லியின் சட்டம் மற்றும் ஒழுங்குக்கு ஆபத்தை
விளைவிக்கும். தில்லி ஏழைக் குடியிருப்பாளா்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான கல்விக்காக போராடும் போது, ஆம் ஆத்மி அரசு சட்டவிரோதமாக ஊடுருவியவா்களின் குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை வழங்குகிறது என்றாா் மனோஜ் திவாரி.
மேலும், இச்செய்தியாளா் சந்திப்பின் போது, பாஜக எம்எல்ஏ-க்கள் மோகன் சிங், அஜய் மஹாவா், ஜிதேந்திர மகாஜன்
ஷாஹ்தரா வடக்கு மண்டலத் தலைவா் பிரமோத் குப்தா, மாவட்ட தலைவா்கள் பூனம் செளகான், மனோஜ் தியாகி; மற்றும் மாவட்ட ஊடகப் பொறுப்பாளா் தீபக் செளகான் ஆகியோா் கலந்து கொண்டனா்.