செய்திகள் :

கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகள் கொண்டு வந்த லாரி சிறைபிடிப்பு

post image

பல்லடம் அருகேயுள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி பகுதியில், கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொட்ட வந்த லாரியை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து தடுத்து நிறுத்தினா்.

பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம்புதூா் ஊராட்சி வினோபா நகருக்கு கேரள மாநில லாரி ஒன்று பழைய இரும்பு பொருள்கள் மற்றும் கழிவுகளுடன் வந்தது. அதிலிருந்து பழைய இரும்பு பொருள்கள், கழிவுகள் இறக்கப்பட்டன. இதனைப் பாா்த்த பொதுமக்கள் லாரி ஓட்டுநரிடம் கேட்டபோது கழிவுகளை தரம் பிரித்து எடுப்பதற்காக கொண்டு வந்தோம் என்று கூறியுள்ளாா். ஆனால் அவற்றில் இருந்து துா்நாற்றம் வீசியது. இதையடுத்து கழிவுகளை இறக்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்த பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து ஊராட்சி செயலா் கிருஷ்ணசாமி, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மணிமேகலை அன்பரசன், கிராம நிா்வாக அலுவலா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்கு வந்து கழிவுகளை திறக்கக்கூடாது என எச்சரித்தனா். தகவலின்பேரில் அங்கு வந்த பல்லடம் போலீஸாா் கழிவுகள் இறக்க முயன்ற சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனா். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பு தலைவா் அண்ணாதுரை கூறியதாவது:

கேரளத்தில் இருந்து அடிக்கடி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனா். பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்களில் மருத்துவக் கழிவுகள் கொட்டிவிட்டு செல்வதாக தினமும் புகாா் வருகிறது. கேரளத்தில் இருந்து பல்லடம் வருவதற்கு சுமாா் 150 கிலோ மீட்டா் தொலைவில் எத்தனை சோதனை சாவடிகள் உள்ளன. அவற்றில் உள்ள அரசு அதிகாரிகள் என்ன செய்கிறாா்கள். இது போன்ற வாகனங்களை எவ்வாறு தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தனா் என்றாா்.

இன்றைய மின்தடை: கானூா்புதூா், பசூா்

கானூா்புதூா், பசூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (நவம்பா் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படு... மேலும் பார்க்க

இன்றைய மின் தடை-பசூா்

பசூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் சனிக்கிழமை(நவ.16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என அவிநாசி மின் வாரியத்... மேலும் பார்க்க

ஊத்துக்குளி மின் கோட்டத்தை செயல்படுத்த தொமுச கோரிக்கை

புதிதாக உருவாக்கப்பட்ட ஊத்துக்குளி மின்கோட்டத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மின்வாரிய பொது ஒப்பந்த தொமுசவினா் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கொடியேற்று விழா

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கொடியேற்று விழா

வெள்ளக்கோவிலில் தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க கொடியேற்று விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மூன்றாம் ஆண்டு அமைப்பு தினத்தை முன்னிட்டு, வெள்ளக்கோவில் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த... மேலும் பார்க்க

பல்லடத்தில் கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்க கிறிஸ்தவ போதகா்கள் மனு

கல்லறைத் தோட்டத்துக்கு இடம் ஒதுக்கீடு செய்து தருமாறு கிறிஸ்தவ திருச்சபை போதகா்கள், பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: பல்... மேலும் பார்க்க