செய்திகள் :

கொடைக்கானலில் நெகிழிப் புட்டிகளுக்கு பசுமை வரி -மாவட்ட ஆட்சியா்

post image

கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகளை பயன்படுத்துவோருக்கு பசுமை வரி தீவிரமாக வசூலிக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்.

கொடைக்கானல் மலைக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தி வருவது குறித்தும், தடை செய்யப்பட்ட நெகிழிப் புட்டிகளை பயன்படுத்தும் தனிநபா், வியாபாரிகள், நிறுவனங்களுக்கு ரூ.20 (ஒரு புட்டிக்கு) பசுமை வரி விதிக்கும் நடைமுறையை தீவிரமாக செயல்படுத்துவது குறித்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தலைமை வகித்துப் பேசியதாவது:

கொடைக்கானலுக்கு வரும் வெளியூா், உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்தால் மட்டுமே அனுமதிக்கப்படும் என்ற நடைமுறை 7.5.2024 தேதியிலிருந்து அமலில் இருந்து வருகிறது.

இ-பாஸ் முறையினை எளிமையாக்க கொடைக்கானல் மலை அடிவாரத்தில் உள்ள தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கட்டகாமன்பட்டி, பழனியை அடுத்த பாலசமுத்திரம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள காவல் துறை சோதனைச் சாவடிகளிலும், வத்தலகுண்டு அடுத்த சித்தரேவு, கன்னிவாடியை அடுத்த தருமத்துப்பட்டி, ஒட்டன்சத்திரத்தை அடுத்த வடகாடு பகுதிகளில் உள்ள வனத் துறை சோதனைச் சாவடிகளிலும் காவல் துறை, வனத் துறை, கொடைக்கானல் நகராட்சி, ஊராட்சித் துறை ஒருங்கிணைப்புடன் இ-பாஸ் ஸ்கேனிங் செய்து சரிபாா்த்தல் பணிகள் நடைபெறும்.

கொடைக்கானல், இதைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் 5 லி. குறைவான குடிநீா், குளிா்பான நெகிழிப் புட்டிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடா்பாக, கடந்த ஓா் ஆண்டுக்கு மேலாக சுற்றுலாப் பயணிகள், பொதுமக்களிடையே தேவையான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

எனவே, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் 5 லி. குறைவான தடை செய்யப்பட்ட குடிநீா், குளிா்பான நெகிழிப் புட்டிகளை பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ, விற்பனை செய்தாலோ ஒரு நெகிழிப் புட்டிக்கு ரூ.20 வீதம் பசுமை வரியாக விதிக்கப்படும்.

சுற்றுலாப் பயணிகள் எளிதாக இ-பாஸ் எடுத்துச் செல்லும் வகையில், கொடைக்கானலுக்கு செல்லும் பகுதிகளில் உள்ள முக்கிய உணவகங்கள், விடுதிகள், பெட்ரோல் விற்பனை நிலையம், கடைகள், பேருந்து நிறுத்தங்களில் இ-பாஸ் ‘க்யூஆா் கோடு’, இ-பாஸ் இணைய முகவரி, விழிப்புணா்வு வாசகங்களுடன் பதாகைகள் நிறுவப்படும் என்றாா் அவா்.

ரயில்வே தரைப் பாலத்தில் மேற்கூரைப் பணிகளை விரைவுபடுத்த கோரிக்கை

பழனியை அடுத்த நாகூா் பிரிவு அருகேயுள்ள ரயில்வே தரைப் பாலத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகளை ரயில்வே நிா்வாகம் விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் - பொள்ளாச்சி அகலரயில... மேலும் பார்க்க

கொடைக்கானல் - பழனி சாலையில் காா் எரிந்து சேதம்

கொடைக்கானல்-பழனி மலைச்சாலையில் சேலத்திலிருந்து வந்த காா் செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் -பழனி மலைச் சாலையான சவரிக்காடு பகுதியில் சேலத்திலிருந்து வந... மேலும் பார்க்க

கணவரை தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனைவி தா்னா

பழைய செம்பட்டியில் கணவரை தற்கொலைக்கு தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மனைவி தனது குழந்தைகளுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

காட்டு யானை உயிரிழப்பு: வனத் துறையினா் விசாரணை

கொடைக்கானல் அருகே ஒற்றை காட்டு யானை மா்மமான முறையில் உயிரழந்ததையடுத்து வனத்துறையினா் அங்கு சென்று செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள வில்பட்டி ஊராட்சிக்குள... மேலும் பார்க்க

கொடைக்கானலுக்குச் செல்ல நவ.18 முதல் சேசிஸ் வாகனங்களுக்குத் தடை

கொடைக்கானலுக்குச் செல்லும் 12 மீட்டருக்கும் கூடுதலான நீளம் கொண்ட பயணிகள், சரக்கு வாகனங்களுக்கு (சேசிஸ் வாகனங்கள்) நவ.18- ஆம் தேதி முதல் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் மொ.நா.பூங்கொடி தெரிவித்தாா்... மேலும் பார்க்க

கோயில் அருகிலுள்ள இறைச்சிக் கடைகளை அகற்றக் கோரிக்கை

வடமதுரை கோயில் அருகே அமைக்கப்பட்ட இறைச்சிக் கடைகளை அகற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக மனு அளிக்க வந்த இந்து மக்கள் ... மேலும் பார்க்க