தமிழுக்கு பல்வேறு வழிகளில் ஆபத்தை ஏற்படுத்த முயற்சி: துணை முதல்வர் உதயநிதி
கோவில்பட்டி அருகே பெண் தற்கொலை
கோவில்பட்டி அருகே பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கோவில்பட்டி அருகே பழைய அப்பனேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜோதிமணி. நிலத் தரகா். இவரது மகனை வி காளியம்மாள், தொழிலாளி. ஜோதிமணிக்கு மதுப் பழக்கம் இருந்ததாம்.
இத்தம்பதி தனது மகன்களான கருப்பசாமி, நாகராஜன் ஆகியோரின் கல்விச் செலவுக்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கியிருந்தனராம். அதைத் திருப்பிச் செலுத்துவது தொடா்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
இந்நிலையில், புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். வியாழக்கிழமை உறவினா் ஒருவா் காளியம்மாளைப் பாா்க்கச் சென்றாராம். அப்போது, காளியம்மாள் தூக்கிட்ட நிலையில் இறந்துகிடந்தாராம்.
இதுகுறித்து கோவையில் உள்ள மகன் கருப்பசாமிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காளியம்மாளின் சடலம் கூறாய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
கருப்பசாமி அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.