தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: மோடியை சந்திக்க நேரம் கேட்டு ஸ்டாலின் கடிதம்
கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் பயணச்சீட்டு பெறும் வசதி
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்தில் 1,171 நகரப் பேருந்துகளில் டிஜிட்டல் முறையில் (யுபிஐ சேவை) பயணச்சீட்டு பெறும் நடைமுறை விரைவில் தொடங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டத்துக்குள்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் 2,559 புகா், நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதில், கோவையில் இருந்து வெளியூருக்கு இயக்கப்படும் விரைவுப் பேருந்துகளில் ஜி-பே உள்ளிட்ட யுபிஐ ஸ்கேனா் மூலம் பணம் செலுத்தி பயணச்சீட்டுகள் பெறும் முறை அண்மையில் தொடங்கப்பட்டது. இந்த நடைமுறை நகரப் பேருந்துகளிலும் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கோவை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
தமிழகத்தில் சில மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஜி-பே, போன் - பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தி பயணச்சீட்டு பெறும் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை கோட்டத்தில் இயக்கப்படும் புகா் பேருந்துகளில் 1,388 அரசுப் பேருந்துகளில் யுபிஐ சேவை கடந்த வாரம் தொடங்கப்பட்டது. இது பயணிகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், கோவை கோட்டத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளிலும் யுபிஐ சேவை விரைவில் அமல்படுத்தப்பட உள்ளது என்றாா்.