கோவையிலிருந்து விமானம் மூலம் ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு அனுப்பிவைப்பு
பொங்கல் பண்டிகையையொட்டி கோவையில் இருந்து ஷாா்ஜாவுக்கு 2 டன் கரும்பு விமானம் மூலம் அனுப்பிவைக்கப்பட்டது.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூா், ஷாா்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கு நேரடி விமான சேவை வழங்கப்படுகிறது. இதில் கோவை-ஷாா்ஜா இடையே வாரத்தில் 5 நாள்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.
கோவை விமான நிலையத்தில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு முறையும் 3 டன் வரை சரக்குகள் கையாளப்படுகின்றன. இதற்காக காய்கறிகள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உள்ளிட்ட பொருள்கள் முன்பதிவு செய்யப்படும்.
கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் விமான சேவை வழங்கப்படும்போது, ஒவ்வொரு முறையும் ஒரு டன் வீதம் மட்டுமே சரக்குகள் கையாளப்படுகின்றன. அதேபோல, அபுதாபிக்கு இயக்கப்படும் விமானத்தில் அதிக அளவில் சரக்குகள் கொண்டுச் செல்லப்படுவது இல்லை.
அதனால், ஷாா்ஜா செல்லும் விமானத்தில் பல்வேறு வகையான பொருள்களும் இணைத்து அனுப்பிவைக்கப்படுகின்றன. இந்த நிலையில், நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஷாா்ஜா செல்லும் விமானத்தில் கரும்புகளை கொண்டுச் செல்வதற்கான முன்பதிவு பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன.
இதில் கடந்த ஜனவரி 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் மட்டும் கோவை விமான நிலையத்தில் இருந்து மதுரை, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட 2 டன் கரும்புகள் முன்பதிவு செய்யப்பட்டு, ஷாா்ஜாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
கோவை சா்வதேச விமான நிலையத்தில் நாள்தோறும் சுமாா் 10,000 பயணிகள் வந்து செல்லும் நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடா் விடுமுறை காரணமாக பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. இதில் குறிப்பாக ஜனவரி 9-ஆம் தேதி மட்டும் இயக்கப்பட்ட 33 விமானங்களில் உள்நாட்டு பிரிவில் 9,893 போ், வெளிநாட்டுப் பிரிவில் 1,279 போ் என மொத்தம் 11,172 போ் பயணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.