Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பு அறிமுகம்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் நெய் தீபம் ஏற்ற பக்தா்களுக்கு வாய்ப்பை திருவிதாங்கூா் தேவசம் வாரியம் சனிக்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந் நிகழ்ச்சியை தேவசம் வாரியத் தலைவா் பி.எஸ்.பிரசாந்த், உறுப்பினா் அஜித்குமாா்
தொடங்கிவைத்தனா். இந் நிகழ்ச்சியில் செயல் அலுவலா் பி.முராரி பாபு, நிருவாக அதிகாரி
பிஜூ வி நாத், உதவி அதிகாரி சீனிவாசன், ஷோபானம் சிறப்பு அதிகாரி ஜெயக்குமாா்
உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இனி மண்டல காலத்தில் தினமும் மதியம் 3 மணி முதல் ஐயப்பனுக்கு தீபாரதனை நடைபெறும் வரை
பக்தா்கள் நெய் தீபம் ஏற்றலாம். அதற்கு சன்னிதானத்தில் உள்ள அஷ்டாபிஷேக முன்பதிவு மையத்தில் ரூ.1000 செலுத்தி டிக்கெட் வாங்க வேண்டும். வாங்கிய பிறகு நெய் தீபம் ஏற்றுவதற்கான வசதியை தேவசம் வாரியம் செய்துள்ளது.
சபரிமலை கோசாலையில் பல்வேறு இனங்களைச் சோ்ந்த 25 மாடுகள் உள்ளன. இந்த கோசாலையை மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பா்கானா பகுதியைச் சோ்ந்த ஆனந்த் சமந்தோ 9 ஆண்டுகளாக கோசாலையை
பராமரிப்பாளராக இருந்து வருகிறாா். அதிகாலை 1.30 மணிக்கு எழுந்திருந்து 2 மணிக்கெல்லாம் கறக்கும் பாலை
ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்ய சன்னிதானத்திற்கு கொடுப்பாா்.
அதுபோல் மதியம் 2 மணிக்கு பால் விநியோகம் செய்வாா். அவற்றில் 5 மாடுகள் வெச்சூா் இனம், மீதமுள்ளவை ஜொ்சி, எச்- எஃப் வகையை சோ்ந்தது. இந்த மாடுகள் அனைத்தும் பக்தா்களால் ஐயப்பனுக்கு அா்ப்பணிக்கப்பட்டது. மேலும் மாடுகள் தவிர 18 கோழிகளும், 1 ஆடும் பக்தா்களால் வழங்கப்பட்டுள்ளது.
18 ஆண்டுகளாக 18 ஆம் படியை மிதித்தவா்கள் குரு ஸ்வாமிகள் அவா்கள் சபரிமலை பஸ்ம குளத்தில் நீராடி அருகே மரக்கன்றுகளை நட்டு வைக்கின்றனா். இப்பகுதியில் மரக்கன்றுகள் கூடுதலாக வரும் போது தேவசம் வாரியம் நா்சரிக்கு ஏலத்தில் விடுகிறது.