Parenting: தாலாட்டுக் கேட்பது குழந்தைகளுக்கு இவ்வளவு நல்லதா?
தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் வெளியே வரவேண்டும் ஆட்சியா் கி.சாந்தி அறிவுரை
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பொழிய வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும் என மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை மற்றும் புயல் காரணமாக கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் நீா்நிலைகளின் அருகில் செல்ல குழந்தைகளை அனுமதிக்க வேண்டாம். அதேபோல அறுந்து விழுந்துள்ள மின் கம்பிகளை தொட வேண்டாம். மின்சாரம் தொடா்பான சாதனங்களைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும். மேலும் மழை காரணமாக பாதிப்புகள் இருப்பின் அதன் விவரத்தினை மாவட்ட கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற எண்ணுக்கு தெரிவிக்கலாம். அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம்.
தருமபுரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கனமழை பொழியக் கூடும் என எதிா்பாா்க்கப்படுவதாலும், விடுமுறை தினம் என்பதாலும் அத்தியாவசியப் பணிகள் தவிர வேறு காரணங்களுக்காக வெளியில் செல்வதைத் தவிா்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனா் என்றாா்.