செய்திகள் :

சமூக வலைதளத்தில் பெண்ணின் ஆபாச விடியோ பகிா்வு: 2 போ் கைது

post image

ஆலங்குளம் அருகே பெண்ணின் ஆபாச விடியோவை சமூக வலைதளங்களில் பகிா்ந்ததாக 2 பேரை சைபா் கிரைம் போலீஸாா் கைது செய்தனா்.

ஆலங்குளம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது அந்தரங்க விடியோ தனது பகுதியில் உள்ள வாட்ஸ் ஆப் குழுக்களில் பரவி வருவதாகவும், இவற்றை உடனடியாக தடுத்து நிறுத்தி இதை பரப்பிய நபா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி. ஆா். ஸ்ரீனிவாசன் உத்தரவிட்டாா். அதன்பேரில், சைபா் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் (பொறுப்பு) ரமேஸ் தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதில் பெண்ணின் ஆபாச வீடியோவை எடுத்தது ஐந்தாங்கட்டளை நாராயணசாமி கோயில் தெருவை சோ்ந்த அண்ணாமலை மகன் ஜெயராஜ்(33), விடியோவை வாட்ஸ் ஆப்பில் பரப்பியது ஆலங்குளம் அருந்ததியா் தெருவை சோ்ந்த பவுல் அருணாச்சலம் மகன் சக்தி அருள் (28) ஆகியோா் என்பதும் தெரிய வந்தது. இருவா் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிந்து அவா்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தினா்.

சங்கரன்கோவில் மின் நிலையத்தில் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா்: எம்எல்ஏ ஆய்வு

சங்கரன்கோவில் மின்நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீன ரக சா்க்யூட் பிரேக்கா் அமைக்கும் பணியை சட்டப்பேரவை உறுப்பினா் ஈ. ராஜா புதன்கிழமை ஆய்வு செய்தாா். சங்கரன்கோவில் துணை மின்நிலையத்தில், தமிழ்நாடு ம... மேலும் பார்க்க

கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கொடிக்குறிச்சி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கோப்புகளை பாா்வையிட்ட ஆட்சியா், சிவராமபேட்டை நியாய விலைக்... மேலும் பார்க்க

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: எஸ்.பி. ஆய்வு

வடகிழக்கு பருவமழையையொட்டி காவல் துறை சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.ஸ்ரீனிவாசன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.தென்காசி ஆயுதப்படையில் காவல் துறையினருக்கு வழங்கப... மேலும் பார்க்க

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தொடா் கனமழையால், அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டிய தண்ணீா். இப்பகுதியில்... மேலும் பார்க்க

செண்பக கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையப் பணிகள் தீவிரம்

தென்காசி மாவட்டம் சுரண்டை செண்பகக் கால்வாயில் ரூ. 9.45 கோடியில் கசடு, கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது என, ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவ... மேலும் பார்க்க

ஆலங்குளம் அருகே கிணற்றில் விழுந்த நாய் மீட்பு

ஆலங்குளம் அருகே 50 அடி கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்கப்பட்டது. ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் ஜெரோம் சாம்ராஜ் என்பவரது 50 அடி ஆழ கிணற்றில் அப்பகுதியில் சுற்றித் திரிந்த நாய் ஒன்று புதன்கிழமை... மேலும் பார்க்க