செய்திகள் :

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணைக்கு தடை! - இடைக்கால உத்தரவில் உயர் நீதிமன்ற கிளை தெரிவித்தது என்ன?

post image

தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், கிராமப்பெயர்களில் உள்ள சாதியப் பெயர்களை நீக்க தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

தமிழக அரசு இந்த அரசாணையை பிறப்பித்தபோதே ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இதற்கிடையே கோவையிலுள்ள தமிழகத்தின் நீளமான மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு என பெயர் சூட்டியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்த, அது விதி விலக்கான பெயர் என்று அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனாலும், 'சாதிப்பெயர் நீக்கம் குறித்த கொள்கையில் தமிழக அரசு குழப்புகிறது' என்று எதிர்க்கட்சியினரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்தான் மதுரையைச் சேர்ந்த பரமசிவம் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "தமிழக முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அவசர கதியில் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, . ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19 ஆம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நடைமுறையில் பல பிரச்னைகள் உள்ளது, மக்களின் தனிப்பட்ட ஆவணங்களில பெயர் மாற்றம் செய்வதில் நடைமுறைச் சிரமங்கள் உள்ளன. இது அரசியலமைப்பு சட்டம், பாரம்பரியம், பண்பாட்டிற்கு எதிரானது. எனவே சாதிப்பெயர்களை நீக்கும் இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

சாதி

இந்த மனு, நீதிபதிகள் அனிதா சுமந்த், குமாரப்பன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன், " தமிழக அரசின் இந்த திடீர் உத்தரவு குழப்பம் ஏற்படுத்தும், ஆதார், வாக்காளர் அட்டை, வாகனப் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு ஆவணங்களின் முகவரியில் பெயர் மாற்றம் செய்வதில் சிக்கல் ஏற்படும், இதை கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு இந்த அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது, எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்" என வாதிட்டார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

அப்பொழுது நீதிபதிகள், "எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் இவ்வாறு செய்தால் பள்ளி, கல்லூரி ஆவணங்கள், வருமான வரி அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் உடனடியாக எப்படி முகவரி மாற்றம் செய்வார்கள்?" என கேள்வி எழுப்பினார்கள்

உயர் நீதிமன்றம் மதுரை கிளை

அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல் கான், "மனுதாரர் மனுச் செய்ததில் உள்நோக்கம் உள்ளது. அரசியலமைப்பு சட்டம் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. தீண்டாமை கூடாது என்கிறது, சமூக நீதியை பின்பற்றும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எப்படி மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று மனுதாரர் குறிப்பிடவில்லை.

இந்தியாவில் உ.பி-யில் அலகாபாத் நகரம் பிராயக்ராஜாகவும், மகாராஷ்டிராவில் அவுரங்காபாத் சத்ரபதி சம்பாஜி என்றும் டெல்லியில் பல சாலைகள் மற்றும் தெருக்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டபோதெல்லாம் வராத குழப்பம் இப்போது மட்டும் எப்படி வந்துவிடப் போகிறது? அங்கு போய் மனுதாரர் தடை கோரி மனு தாக்கல் செய்யவில்லை. ஆனால், சாதிய பாகுபாடு இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான முடிவெடுத்து அறிவித்திருப்பதற்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது, தமிழகத்தில் ஆட்சேபேனை இருந்தால் மக்கள் கருத்து தெரிவிக்க மாநில அரசு அவகாசம் அளித்துள்ளது. மக்களின் கருத்துகளை மதிப்பீடு செய்து முடிவெடுக்கப்படும். இழிவுபடுத்தும் வகையில் பெயர்கள் இருந்தால் நீக்கப்படும். தற்போது உத்தேசமாகத்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது இறுதியானது அல்ல. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்." என்று வாதிட்டார்.

உயர் நீதிமன்றம் மதுரை கிளை
உயர் நீதிமன்றம் மதுரை கிளை

அப்போது நீதிபதிகள், "சாதிப் பெயர்கள் நீக்குவது குறித்து மாநில அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது. அதே நேரத்தில் இதற்கு என்ன வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெளிவுபடுத்தவில்லை, பல்வாறு நடைமுறைச் சிரமங்கள் உள்ளதாக மனுதாரர் தரப்பில் கூறப்படுகிறது, எனவே அது குறித்து பதில் மனு தாக்கல் செய்யுங்கள், அதுவரை சாதியப் பெயர்கள் மாற்றுவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பது, ஆய்வு நடத்துவது செய்து கொள்ளலாம், ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்க வேண்டாம்" என உத்தரவிட்டு, ''இம்மனு குறித்து தமிழக அரசு தரப்பில் இரண்டு வாரங்களில் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர்.

உள்ளாட்சித் தேர்தல்களில் 42% இட ஒதுக்கீடு: தெலங்கானா அரசின் மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்!

தெலங்கானா மாநிலத்தின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 42 சதவிகிதமாக அமல்படுத்த, மாநில அரசு திட்டமிட்டது. இதை எதிர்த்து தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்றம... மேலும் பார்க்க

டாஸ்மாக்: `என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? சிபிஐ கூட.!' ED-க்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டில் டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டது தொடர்பான வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் தொடங்கி நடைபெற்று வருகிறது. மூத்த வழக்கறிஞர் கபில் சிபல்... மேலும் பார்க்க

`கோயில் சொத்துகள் பத்திரப் பதிவு' தமிழக அரசின் அரசாணைக்கு தடை! - உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் சொத்துகளை பத்திரப்பதிவு செய்யும் வகையில் வெளியான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.பதிவுத்துறைசேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையி... மேலும் பார்க்க

திருவட்டாறு ஆதிகேசவரின் தங்க கவசங்கள் திருடப்பட்ட வழக்கு - தண்டனை அறிவிக்கப்பட்ட 18 பேர் விடுதலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வரலாற்று சிறப்புமிக்க ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆதிகேசவ பெருமாளின் தங்க கவசங்கள், நகைகள் உள்ளிட்டவை திருடப்பட்டு வருவதாக 1992-ம் ஆண்டு புகார... மேலும் பார்க்க

``இது என்னைப் பாதிக்காது'' - காலணி வீசிய வழக்கறிஞரை தவிர்த்து, வழக்கை கவனித்த தலைமை நீதிபதி கவாய்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக கவாய் பதவி வகித்து வருகிறார். இன்று அவர் வழக்கு ... மேலும் பார்க்க

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரனையின்போது நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

கரூரில் நடந்த த.வெ.க பரப்பரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டையே கலங்க வைத்தது.இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை கோரியும், த.வெ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 7 பொது நல... மேலும் பார்க்க