செய்திகள் :

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரனையின்போது நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

post image

கரூரில் நடந்த த.வெ.க பரப்பரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டையே கலங்க வைத்தது.

இது சம்பந்தமாக சி.பி.ஐ விசாரணை கோரியும், த.வெ.க மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் 7 பொது நல வழக்குகளும், த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன் மனுக்களும் மதுரை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு விசாரணையின்போது நடந்தவற்றை பார்க்கலாம்.

கரூர் துயரம் - தவெக
கரூர் - தவெக

"ஏழு வழக்குகளும் ஒவ்வொரு வழக்காக தனியாக விசாரணை நடத்தப்படும்" என்று நீதிபதிகள் தெரிவிக்க, "சில வழக்குகள் சிபிஐ விசாரணை கோரி தாக்கலாகியுள்ளன, பொதுக்கூட்டங்கள் போன்றவற்றிற்கான வழிகாட்டுதல்களை பிறப்பிக்கக் கோரி சில வழக்குகள் தாக்கலாகியுள்ளன.

இழப்பீடு கோரி சில வழக்குகள் தாக்கலாகியுள்ளன. ஆகவே அதற்கேற்ப விசாரிக்கலாம்" என்று அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பொதுக்கூட்டங்களின் போது உரிய வழிகாட்டல்களை டிஜிபி பிறப்பிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "விஜய் பிரசாரம் செய்த நாமக்கல், கரூரில் அசம்பாவிதங்கள் நிகழ்ந்துள்ளன.

குறிப்பிடப்பட்ட நேரம் 12 மணி ,ஆனால் விஜய் வந்தது இரவு 7 மணி, குறிப்பிட்ட நேரத்தில் விஜய் வராததால் கூடியிருந்தவர் நீரிழப்பிற்கு ஆளாகி, சோர்வடைந்தனர், அந்த நேரத்தில் ஏற்பட்ட நெரிசலால் உயிரிழப்பு ஏற்பட்டது" என்று தெரிவிக்கபட்டது.

"எப்படி அந்த இடத்தில் அனுமதி கொடுத்தீர்கள், அது மாநில சாலையா? மத்திய அரசின் சாலையா?" என்று அனுமதி நகலை நீதிபதிகள் கேட்டனர்.

"வேலுச்சாமிபுரம் அருகேயுள்ள பேருந்து நிலையம் அருகே அனுமதி கோரப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை அருகே அல்ல" என்று அரசுத்தரப்பில் தெரிவித்தனர்.

"கூட்டத்திற்கு வந்த பொதுமக்களுக்கு குடீநீர், கழிப்பறை போன்ற வசதிகள் வழங்கப்பட்டதா? எந்த கட்சியாக இருந்தாலும் பாரபட்சமின்றி பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

கரூர் விஜய் பிரசாரம்
கரூர் விஜய் பிரசாரம்

எந்த அரசியல் கட்சியினரும், அமைப்புகளும் பொதுக்கூட்டம் அல்லது எந்த கூட்டமாயினும் தேசிய, மாநில நெடுஞ்சாலை அருகே நடத்தப்படக்கூடாது அனைத்து அரசியல் கட்சி, அமைப்புகளின் பொதுக்கூட்டங்களின் போது குடிநீர், மருத்துவம் ஆம்புன்ஸ் வசதியோடு, கழிப்பறை, வெளியேறிச் செல்லும் வழி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்துத்தரப்படுவது உறுதிப்படுத்த வேண்டும்" என்றனர் நீதிபதிகள்.

"கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் இரு வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்" என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சிபிஐ விசாரணை கோரிய வழக்கு விசாரணையின்போது, "சம்பவம் நடைபெற்று மாநில அரசின் விசாரணை நடைபெற்றுவரும் நிலையில் வேறு விசாரணை கோருவது ஏன்? கரூர் சம்பவத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நீதிமன்றத்தை அரசியல் களமாக்காதீர்கள். வழக்கு விசாரணை தொடக்க நிலையில் இருப்பதால், மனுதாரர் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது, சிபிஐக்கு மாற்றக்கோரி தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" என உத்தரவிட்டனர்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

"உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் நிலையை எண்ணிப்பாருங்கள். யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?" என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள், சிபிஐ விசாரணை, இழப்பீட்டு் தொகை அதிகரிப்பு, உடற்கூராய்வு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 4 வழக்குகளைத் தள்ளுபடி செய்தனர்.

பொதுக்கூட்ட நடைமுறைகள் தொடர்பான 3 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன.

கரூர் கூட்ட நெரிசல் வழக்குகள்; விசாரணையைத் தொடங்கிய மதுரை உயர் நீதிமன்றம்

கடந்த அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கரூரில் ஏற்பாடு செய்த பரப்புரைக் கூட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலர் காயமடைந்துள்ள நிலையில் பாதிக... மேலும் பார்க்க

`சீமான் - விஜயலட்சுமி பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும்' - உச்சநீதிமன்றத்தின் உத்தரவு என்ன?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்... மேலும் பார்க்க

``புல்டோசர் நடவடிக்கைக்கெதிராக நான் அளித்த தீர்ப்பு எனக்கு மன நிறைவானது'' - CJI பி.ஆர்.கவாய்

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 2017-ல் ஆரம்பித்த புல்டோசர் நடவடிக்கை மெல்ல மெல்ல மத்தியப்பிரதேசம், ஹரியானா என பா.ஜ.க ஆளும் மாநிலங்களுக்கும் பரவியது. பெண்களுக்கெதிரான குற்றங்களைச் செய்வோர், குற... மேலும் பார்க்க

அதானி நிறுவன வழக்கு: ஊடகங்களை வாயடைக்கச் சொல்லும் நீதிமன்றமும் அமைச்சகமும்! ஜனநாயகத்திற்கான சவாலா?

கார்ப்பரேட் கரங்கள் எதையும் வளைப்பதற்கு நீளக்கூடியவை – நீதியைக் கூட. இதற்கு ‘ஐ விட்னஸ்’ சாட்சியாகப் பல வழக்குகள், தீர்ப்புகள் இருக்கின்றன. தற்போது வந்துள்ள ஒரு நீதிமன்றத் தடையாணை, "இவ்வளவு அப்பட்டமாகவ... மேலும் பார்க்க

போலீஸ் விசாரணையின்போது CCTV கட்; AI மூலம் தீர்வு - உச்ச நீதிமன்றம் யோசனை!

காவல் நிலையங்களில் பயன்படாத CCTV கேமராக்களை கண்காணிப்பதற்காக முழுமையான தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைப்பது குறித்து பரிசீலித்துவருவதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.நீதிபதிகள் விக்ரம் நாத் ம... மேலும் பார்க்க

Waqf Bill 2025: `முழுமையாக தடை விதிக்க முடியது; ஆனால்.!’ - உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025-ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்த விவகாரத்தில், `சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தில் பாஜக அ... மேலும் பார்க்க