Mana Mitra: இனி அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம்... வாட்ஸ்அப் போதும்; ஆந்திர அ...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட காங்கிரஸ்!
தில்லி பேரவைத் தேர்தலுக்கு சில நாள்களே உள்ள நிலையில், காங்கிரஸ் புதன்கிழமை தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.
இந்த அறிக்கையைத் தில்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ் வெளியிட்டார். அவருடன் காங்கிரஸ் தகவல் தொடர்பு பொறுப்பாளர் ஜெய்ராம் ரமேஷ் இருந்தார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
பெண்களுக்கு மாதாம் மானியமாக ரூ,2,500, 300 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் ரூ.500-க்கு எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கப்படும். மேலும், ரூ.25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீடு, இலவச ரேஷன் ஆகியவை கட்சியின் வாக்குறுதிகளில் அடங்கும்.
படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதத்திற்கு ரூ.8,500 நிதியுதவி வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.5-க்கு உணவு வழங்கும் 100 இந்திரா கேன்டீன்களை நகரம் முழுவதும் தொடங்கப்படும்.
தில்லியில் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவி வருகின்றது. தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி அறிவிக்கப்படும்.