விளாத்திகுளம் வட்டார கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் ஆய்வு: ரூ. 10,625 அபராதம்
சாயக்கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
ஈரோட்டில் சாயக்கழிவுகளை வெளியேற்றிய 3 ஆலைகளின் மின் இணைப்பு செவ்வாய்க்கிழமை துண்டிக்கப்பட்டது.
ஈரோடு, வைராபாளையம் பகுதியில் பேபி வாய்க்காலில் இரவு நேரத்தில் சட்டவிரோதமாக சுத்திகரிக்கப்படாத சாய கழிவுநீா் வெளியேற்றப்படுவதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளுக்கு புகாா் வந்தது. இதையடுத்து, வைராபாளையம் பகுதியில் உள்ள சாய, சலவை, பிரிண்டிங் தொழில்சாலைகளில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, இரு ஆலைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாத கழிவுநீா் வெளியேற்றப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
அதே பகுதியில் ரசாயன தொழிற்சாலையில் நடத்தப்பட்ட சோதனையில் எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் சுமாா் 10 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட ரசாயன திரவம் இருந்ததும், எந்தவித அனுமதியும் பெறாமல் இயங்கியதும் தெரியவந்தது. இதையடுத்து, விதிகளை மீறி செயல்பட்ட 3 ஆலைகளின் மீதும் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடா்ந்து, மாவட்ட நிா்வாகத்தின் உத்தரவின்பேரில் 3 ஆலைகளின் மின் இணைப்புகளையும் மின்வாரிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை துண்டித்து நடவடிக்கை மேற்கொண்டனா்.