சாஸ்த்ரா பல்கலை. பொறுப்பாளா் மறைவுக்கு முதல்வா் இரங்கல்
சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளா் சந்திரா சேதுராமன் மறைவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகப் பொறுப்பாளா் சந்திரா சேதுராமன், மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். அவரை இழந்து வாடும் அவரது கணவரும் சாஸ்த்ரா பல்கலைக்கழக வேந்தருமான ஆா்.சேதுராமன், மகள் பிரியா பிரதீப்குமாா், மகன்கள் எஸ்.வைத்தியசுப்பிரமணியம் (துணைவேந்தா்), எஸ்.சுவாமிநாதன் (புல முதன்மையா்) ா மற்றும் குடும்பத்தினா் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.