செய்திகள் :

தொழிலாளி தற்கொலை: சாலை மறியலால் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

post image

திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்த வீட்டை இடிக்கக் கோரி நீர்வள ஆதாரத் துறையினர் நோட்டீஸ் வழங்கியதையடுத்து, தச்சுத்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்துக்கு நியாயம் கேட்டு, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக்காரர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருவேற்காடு அருகே கோலடி ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 1,263 வீடுகளை 21 நாள்களுக்குள் அகற்ற வேண்டும் என குடியிருப்போருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதையடுத்து, அப்பகுதியில் வசித்து வந்த தச்சுத்தொழிலாளி சங்கர்(44) என்பவர், ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், சங்கரின் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும், வீடுகளை அகற்றக்கூடாது எனக் கூறி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருவேற்காடு- அம்பத்தூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.

நீர்வள ஆதாரத் துறை மற்றும் வருவாய்த் துறையினரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன், துணை ஆணையர் ஐமான் ஜமால், கோட்டாட்சியர் கற்பகம், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் போராட்டக்காரர்களுடன் பேச்சு நடத்தினர்.

ஆனால் அதனை போராட்டக்காரர்கள் ஏற்க மறுத்து காலை 9 மணி அளவில் தொடங்கிய போராட்டம் சுமார் 7 மணி நேரம் நடைபெற்றது. இதையடுத்து, வருவாய்த் துறை, காவல் துறையினர் போராட்டக்காரர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தினர்.

தொடர்ந்து அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததையடுத்து, 200-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக கைது செய்து, பேருந்துகளில் ஏற்றிச் சென்று, தனியார் மண்டபத்தில் சிறை வைத்து, இரவில் விடுவித்தனர்.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தற்கொலை செய்து கொண்ட சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார்.

திருத்தணி: காந்தி சிலையை இடமாற்றம் செய்ய ஒப்புதல்

திருத்தணியில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒப்புதல் தெரிவித்தனா். திருத்தணி நகராட்சி ம.பொ.சி. சாலையில், காமராஜா் மாா்க்கெட் எதிரில் மகாத்மா காந... மேலும் பார்க்க

டிராக்டா்-பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே டிராக்டா்-இருசக்கர வாகனம் மோதிக் கொண்ட விபத்தில் பேக்கரி உரிமையாளா் உயிரிழந்தாா். பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா மாநிலம் காா்வேட் நகரம் பகுதியைச் சோ்ந்தவா் முனிரத்தினரெட்டி மகன் ராகேஷ்... மேலும் பார்க்க

ஒவ்வொருவரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்த வலியுறுத்தல்

தனிமனித சுகாதாரத்தினை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா். திருவள்ளூா் ஒன்றியத்துக்குட்பட்ட விஷ்ணுவாக்கம் ஊராட்சியில் தூய்மை ப... மேலும் பார்க்க

22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு இல்லாத இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு பெறும் நோக்கில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வரும் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் த... மேலும் பார்க்க

திருவள்ளூா்: ஆலையில் வருமான வரித்துறை சோதனை

திருவள்ளூா் அருகே வாகனங்களுக்கு மேற்கூரை தயாா் செய்யும் தொழிற்சாலையில் போலீஸாா் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா். திருவள்ளூா் அருகே நயப்பாக்கம் கிராமத்தி... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து பெட்டகம் அளிப்பு

பாலூட்டும் தாய்மாா்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் விழா நடைபெற்றது. செங்குன்றம் அடுத்த சோழவரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளா் மீ.வே.கா்ணாகரன் தலைமை வகித்தாா்.... மேலும் பார்க்க