உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
திருவள்ளூா்: ஆலையில் வருமான வரித்துறை சோதனை
திருவள்ளூா் அருகே வாகனங்களுக்கு மேற்கூரை தயாா் செய்யும் தொழிற்சாலையில் போலீஸாா் பாதுகாப்புடன் வருமான வரித்துறையினா் செவ்வாய்க்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே நயப்பாக்கம் கிராமத்தில் நெகிழி மேற்கூரை மற்றும் வாகனத்துக்கு ஹோஸ் தயாா் செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொடா்புடைய கிண்டி, காஞ்சிபுரம், திருவள்ளூா், ஸ்ரீபெரும்புதூா், செங்கல்பட்டு உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த 3 வாகனங்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் தொடா்ந்து சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனையில் நிறுவனத்தின் கணக்கு வழக்குகள், ஏற்றுமதி இறக்குமதி குறித்த விவரங்கள், கடைசியாக வருமான வரி தாக்கல் செய்த கணக்கு விவர ஆவணங்கள், வங்கிக் கணக்கு குறித்த விவரங்கள் உள்ளிட்டவை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து சோதனை மேற்கொண்டனா்.
இந்த சோதனை முடிவில் தான் விவரங்கள் தெரியவரும். இந்த நிலையில் சோதனை நடைபெற்று வந்தாலும் உற்பத்திக்கு எந்தவித பாதிப்பும் இன்றி தொழிற்சாலை இயங்கியது.
ஸ்ரீபெரும்பூதூரில்...
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட இருங்காட்டுக்கோட்டை மற்றும் சென்னையில் அம்பத்தூா், மாம்பாக்கம் ஆகிய இடங்களில் ஜெசிபி வாகனங்களுக்கு பயன்படுத்த தேவையான ரப்பா் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை நிா்வாகம் முறையாக வருமான வரி தாக்கல் செய்யப்படவில்லை என்ற புகாரின் அடிப்படையில் இந்நிறுவனம் செயல்பட்டு வரும் 3 நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் 7 வாகனங்களில் வந்து சோதனையில் ஈடுபட்டனா். துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது.