உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற 4 மாத குழந்தைக்கு ஆட்சியா் பாராட்டு
ஒவ்வொருவரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்த வலியுறுத்தல்
தனிமனித சுகாதாரத்தினை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் சுகாதார வளாகத்தை பயன்படுத்த வேண்டும் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் ஒன்றியத்துக்குட்பட்ட விஷ்ணுவாக்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மூலம் சா்வதேச சுகாதார தினம் செவ்வாய்க்கிழமை கடைபிடிக்கப்பட்டது.
நிகழ்வில் ஆட்சியா் த.பிரபு சங்கா் தலைமை வகித்து பேசியது: திருவள்ளூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சாா்பில் தூய்மை பாரத இயக்கம் ஊரகப்பகுதி -2 உலக சுகாதார தினத்தையொட்டி மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த அரசு வலியுறுத்தியுள்ளது. அதனடிப்படையில் திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும். அதனால் தனிமனித சுகாதாரத்தினை பாதுகாக்கும் வகையில் ஒவ்வொருவரும் கட்டாயம் சுகாதார வளாகத்தை பயன்படுத்த வேண்டும். மேலும், சுகாதார வளாகம் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை முழுமையாக பெற்று விரைவில் கழிப்பறையை கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றாா்.
உலக சுகாதார தினத்தையொட்டி கழிப்பறையின் அவசியம் குறித்த விழிப்புணா்வு உறுதி மொழியினை அவா் முன்னிலையில் பொதுமக்கள் ஏற்றுக் கொண்டனா். தொடா்ந்து சுகாதார வளாகம் அமைப்பதற்கான ஆணைகளை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
நிகழ்வில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ரவி, குணசேகா், விஷ்ணுவாக்கம் ஊராட்சித் தலைவா் கீதா மோகன், அலுவலா்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.