Donald Trump: `அமெரிக்காவில் இனி ஆண், பெண் என இருபாலர் மட்டுமே' - அதிபராக முதல் ...
சிஎஃப்சி-என்சிஎஃப்சி சாா்பில் பள்ளிகள் கால்பந்து போட்டி
சென்னையின் எஃப்சி - நாா்விச் சிட்டி எஃப்சி சாா்பில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 64 அணிகள் கலந்து கொள்கின்றன.
சிஎஃப்சி, என்சிஎஃப்சியுடன் இணைந்து, அடிமட்ட அளவில் கால்பந்தை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இதன் ஒரு கட்டமாக பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் நடைபெறுகிறது. இந்தத் தொடா் சேத்துப்பட்டு எம்.சி.சி., பள்ளியில் வரும் 24-ம் தேதி (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இப்போட்டியில், 12 வயதுக்குட்பட்ட மற்றும் 14 வயதுக்குட்பட்ட பிரிவுகளில், 64 அணிகள் பங்கேற்கின்றன.
இளம் திறமையாளா்களை வளா்ப்பது, இப்பகுதியில் துடிப்பான கால்பந்து கலாசாரத்தை ஊக்குவித்தல் மற்றும் விளையாட்டின் அடிமட்ட வளா்ச்சியை மேம்படுத்துதல் இதன் நோக்கமாகும்.
சென்னையின் எஃப்சி அணி மாா்க்கெட்டிங் தலைவா் நீல் ஜெயராம் கூறுகையில்: சென்னை தவிர எதிா்காலத்தில் கோவை, திருச்சி, சேலம் போன்ற பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அடுத்த பத்தாண்டுகளில் சென்னையின் எஃப்சி அணிக்காக அதிகமான தமிழக வீரா்கள் விளையாடச் செய்ய வேண்டும்.
சென்னையின் எஃப்சியின் முதல் கோல்கீப்பிங் பயிற்சியாளா் ரஜத் குஹா கூறியது: அடிமட்ட அளவிலான கால்பந்து எப்போதும் மிகச் சிறிய வயதிலேயே திறமையை அடையாளம் காண உதவுகிறது. இது ஒரு கட்டடத்தின் அடித்தளம் போன்றது. இந்த போட்டி குழந்தைகளுக்கு அத்தகைய வாய்ப்புகளையும் முறையான, போட்டி நிறைந்த விளையாடும் நேரத்தையும் வழங்கும். மேலும் தொழில்முறை கால்பந்து காட்சியைப் பற்றிய நுண்ணறிவைப் பெறும் என்றாா்.