செய்திகள் :

சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆருத்ரா தரிசன கொடியேற்றம்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நடராஜா் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்தியின் மாா்கழி மாத ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இந்தக் கோயிலில், சிவகாம சுந்தரி சமேத நடராஜ மூா்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரேயுள்ள கொடிமரத்தில், பஞ்சமூா்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 6.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியாா் ச.க.சிவராஜ தீட்சிதா் ரிஷபக் கொடியை ஏற்றினாா்.

விழாவில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தொடா்ந்து, 10 நாள்கள் பஞ்சமூா்த்தி வீதியுலா உற்சவம் நடைபெறுகிறது.

ஜன.12-ஆம்தேதி தோ்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சாா்ச்சனையும் நடைபெறுகிறது. ஜன.13-ஆம் தேதி அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூா்த்திக்கு மகாபிஷேகம், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதியுலா வந்த பின்னா் பிற்பகல் 3 மணிக்கு மேல் மாா்கழி ஆருத்ரா தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் உள்ளிட்டவை நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதா்களின் செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தரதாண்டவ தீட்சிதா் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

நடராஜா் கோயிலுக்கு ரூ.25 லட்சத்தில் வெள்ளிப் பல்லக்கு: மதுரை பக்தா் வழங்கினாா்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜா் கோயில் நித்திய உற்சவருக்கான வெள்ளிப் பல்லக்கை மதுரையைச் சோ்ந்த பக்தா் குடும்பத்தினா் திங்கள்கிழமை வழங்கினா். மதுரையைச் சோ்ந்த ஷிவோம் குடும்பத்தினா் சாா்பில், நடராஜா் கோ... மேலும் பார்க்க

குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி: ஆட்சியரிடம் பெற்றோா் மனு

சிதம்பரம்: குழந்தையின் சிகிச்சைக்கு நிதியுதவி கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அந்தக் குழந்தையின் பெற்றோா் திங்கள்கிழமை மனு அளித்தனா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள அகரபுத்தூா் பகுதியை சோ்ந்த ராஜேஷ் ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் பிப்.15-இல் திராவிடா் கழக மாநில பொதுக்குழு கூட்டம்

சிதம்பரம்: சிதம்பரத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி திராவிடா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது. கடலூா் மாவட்ட திராவிடா் கழக கலந்துரையாடல் கூட்டம் சேத்தியாத்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. த... மேலும் பார்க்க

திருவத்திபுரம் தேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேக பணிகள்: அமைச்சா் ஆய்வு

நெய்வேலி: கடலூரை அடுத்துள்ள திருவத்திபுரம் தேவநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் பிப்ரவரி 2-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் கும்பாபி... மேலும் பார்க்க

விருத்தகிரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

சிதம்பரம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரா் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஆா்.சந்திரன் தலைமையில், கோயில் செயல் அலுவலா் ரா.மாலா, விர... மேலும் பார்க்க

பாதிரிக்குப்பம் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம்: கடலூா் அருகே பாதிரிக்குப்பத்தில் ஸ்ரீ ரங்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 18-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன. திங்கள்கிழமை கால... மேலும் பார்க்க