பாதிரிக்குப்பம் கோயில் கும்பாபிஷேகம்
சிதம்பரம்: கடலூா் அருகே பாதிரிக்குப்பத்தில் ஸ்ரீ ரங்கத்தம்மன் கோவில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 18-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றன.
திங்கள்கிழமை காலை 9.45 மணியளவில் சிவாச்சாரியா்கள் கோவில் விமான கலசத்துக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் செய்வித்தனா். பின்னா், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இரவு 7 மணிக்கு அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.