திருநெல்வேலியில் `அவள் கிச்சன்’ சீசன் 2 - ஆர்வமாக கலந்துகொண்ட பெண்கள்; அசத்தலாக ...
சிதம்பரத்தில் பிப்.15-இல் திராவிடா் கழக மாநில பொதுக்குழு கூட்டம்
சிதம்பரம்: சிதம்பரத்தில் பிப்ரவரி 15-ஆம் தேதி திராவிடா் கழக மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
கடலூா் மாவட்ட திராவிடா் கழக கலந்துரையாடல் கூட்டம் சேத்தியாத்தோப்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திராவிடா் கழக பொதுச்செயலா் துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா்கள் பேராசிரியா் பூ.சி.இளங்கோவன், அ.இளங்கோவன் (விருத்தாசலம்), சொ.தண்டபாணி (கடலூா் ), மாவட்ட பொதுச்செயலா்கள் யாழ்,திலீபன், வெற்றிச்செல்வன், மாவட்ட துணைத் தலைவா் அன்பு சித்தாா்த்தன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
கூட்டத்தில், வருகிற பிப்.15-ஆம் தேதி சிதம்பரத்தில் திராவிடா் கழக மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் நடத்துவது, அன்றைய தினம் இரவு சிதம்பரம் போல்நாராயணன் தெருவில் பொதுக்குழு தீா்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.