செய்திகள் :

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை: இளையராஜா நெகிழ்ச்சி

post image

சென்னை: சிம்பொனி நிகழ்ச்சி நம் நாட்டின் பெருமை, என்னுடை பெருமை அல்ல என சிம்பொனி நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இளையராஜாவின் முதல் மேற்கத்திய பாரம்பரிய சிம்பொனி இசை வெளியீட்டு நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியல் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை லண்டன் புறப்பட்ட இசைஞானி இளையராஜா சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசினார்.

அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு மிகப்பெரிய இசை விருந்தாக இருக்கும் என்பதில் எனக்கு கொஞ்சம் கூட சந்தேகம் இல்லை.

சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்துவது எனக்கான பெருமை அல்ல. நாட்டின் பெருமை... இந்தியாவின் பெருமை. இன்க்ரீடிப்பில் இந்தியா போல, இன்க்ரீடிப்பில் இளையராஜா என்றார்.

மேலும், நீங்கள் எல்லாம் சேர்ந்ததுதான் நான். உங்களின் பெருமையைதான் நான் லண்டனில் சேர்க்கப் போகிறேன் என்றார்.

இசை நிகழ்ச்சியின் மகிழ்ச்சி குறித்த செய்தியாளரின் கேள்விக்கு சிம்பொனி இசை நிகழ்ச்சி உங்களுக்கே அவ்வளவு மகிழ்ச்சி இருக்கும்போது எனக்கு எவ்ளோ மகிழ்ச்சி இருக்கும் என பதிலளித்த இளையராஜா, இதுக்கு மேல யாரும் வரப்போறதும் இல்லை. வந்ததும் இல்லை என்றார்.

நாட்டில் பெண்களுக்கான வேலையின்மை 3.2% ஆகக் குறைவு: மத்திய தொழிலாளா் அமைச்சகம்

இதைத்தொடர்ந்து இளையராஜா லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள புகழ்பெற்ற ஈவென்டிம் அப்பல்லோ திரையரங்கில் நடைபெற உள்ள வரலாற்று சிறப்புமிக்க இசை நிகழ்ச்சியில், உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து முதல் இந்தியராக இளையராஜா, தனது முதல் மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.

அப்போது தனது பிரபலமான சில பாடல்களின் பிரத்யேக இசைக்குழு பதிப்புகளை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க

கலைஞர் எழுதுகோல் விருது: நக்கீரன் கோபால், சுகிதா சாரங்கராஜுக்கு வழங்கினார் முதல்வர்!

சென்னை: 2023-ஆம் ஆண்டிற்கான கலைஞர் எழுதுகோல் விருதுகளை நக்கீரன் இரா.கோபால் மற்றும் சுகிதா சாரங்கராஜ் ஆகிய இருவருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கிச் சிறப்பித்தார்.இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்க... மேலும் பார்க்க

சிறையிலிருந்து விடுதலையான குற்றவாளி வெட்டிக் கொலை!

ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்தில் சிறையிலிருந்து வெளியான பதிவு குற்றவாளி பட்டபகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சம் மாவட்டத்தின் துலசிப்பூர் பஞ்சாயத்து தலைவரான மினாத்தி தாஸ் என்பவரின் கணவர் ரபிந்... மேலும் பார்க்க

கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக: அமைச்சர் ரகுபதி பதிலடி

சென்னை: தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்றுவதற்காக அதிமுக இரட்டை வேடம் போடுகிறது எனவும் உங்களைப் போன்ற அடிமைகளை மக்கள் நம்ப போவதுமில்லை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர... மேலும் பார்க்க